கணினி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!

0
minister sengottaiyan
minister sengottaiyan

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நீண்ட நாட்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ள காரணத்தால் மாணவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, பாடத்திட்டத்தை குறைக்கும் நடவடிக்கையில் பள்ளிக்கல்வித்துறை இறங்கி உள்ளது. இது தொடர்பான அறிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் நாளை மறுநாள் தரப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் பல அறிவிப்புகளையும் அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டு உள்ளார். அதில் கணினி பயிற்சி முடித்த ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்படும் மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான கலந்தாய்வு பணிகள் நடைபெறும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் ஆன்லைன் வாயிலாக நடைபெறும் என வெளியான தகவலுக்கு அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

டிசம்பர் மாதம் பொது முடக்கம் தளர்த்தப்படுமா?? முதலமைச்சர் ஆலோசனை!!

மாணவர்களின் சுமையை குறைக்கும் நோக்கில் படத்திட்டத்திடல் 40 சதவீதம் குறைக்கப்பட்டு அதற்கான அறிக்கை தயாராகி வருவதாகவும், அது நாளை மறுநாள் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். பின்னர் அடுத்த 5 நாட்களுக்குள் அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் எனவும் தெரிவித்த அமைச்சர், மீதமுள்ள 60% வினாக்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here