டிசம்பர் மாதம் பொது முடக்கம் தளர்த்தப்படுமா??முதலமைச்சர் ஆலோசனை கூட்டம்!!

0
Conference
Conference

டிசம்பர் மாதம் பொதுமுடக்கம் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துள்ளதால் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ குழுவினருடன் ஆலோசித்து பொதுமுடக்கத்தில் புதிய தளர்வுகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவிப்பார் என கூறப்பட்டு உள்ளது.

டிசம்பர் மாதம் பொதுமுடக்க தளர்வு:

கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால், பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என மக்கள் அதிகமாக கூடும் பகுதிகள் அனைத்தும் மூடப்பட்டது. தற்பொழுது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் பொதுமுடக்கம் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நவம்பர் மாத பொதுமுடக்கம் இன்னும் இரண்டு நாட்களில் முடிய போவதால் அடுத்து வரக்கூடிய டிசம்பர் மாதத்திற்கு பொதுமுடக்கம் தளர்வு குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவ குழுவினருடன் தனித்தனியாக ஆலோசனை செய்ய போவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்நிலையில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் டிச.2ம் தேதி கல்லூரிகள் திறப்பு!!

ஒவ்வொரு முறையும் பொதுமுடக்கம் அறிவிக்கப்படும்போதும் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்தது என்று கூறினாலும் இன்னும் சில இடங்களில் பாதிப்புகள் உயர்ந்துகொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் பொதுமுடக்கத்திற்கு கூடுதல் தளர்வுகள் விதிக்கப்பட்டால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்ற சூழ்நிலை உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பல முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here