தமிழகத்தில் திட்டமிட்டபடி டிச.2ம் தேதி கல்லூரிகள் திறப்பு – அமைச்சர் அன்பழகன் உறுதி!!

0
kp-anbalagan
kp-anbalagan

தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள நிலையில் அரசு ஏற்கனவே அறிவித்தபடி முதுநிலை மாணவர்களுக்கு வரும் டிசம்பர் 2ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் உறுதிபட தெரிவித்துள்ளார். புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் கல்லூரிகள் திட்டமிட்டபடி திறக்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதுமட்டுமின்றி மருத்துவ மாணவர்களுக்கும் டிசம்பர் முதல் வாரத்தில் கல்லூரிகளை திறந்து வகுப்புகளை தொடங்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதி உள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு முதுநிலை 2ஆம் ஆண்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு மாணவர்களுக்கு டிசம்பர் 2ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவித்து இருந்தது.

பெட்ரோல், டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

KP Anbalagan
KP Anbalagan

தற்போது கனமழை காரணமாக அது தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக வெளியான தகவலுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திட்டமிட்டபடி முதுநிலை 2ம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்படும் என தெரிவித்த அமைச்சர், கனமழை இருக்கும் பட்சத்தில் திறப்பை தள்ளிப்போடுவது குறித்து ஆலோசிக்கப்படும் என விளக்கம் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here