6வது நாளாக குறைந்த தங்கத்தின் விலை – துள்ளி குதிக்கும் நகைப்பிரியர்கள்!!

0

சென்னையில் தொடர்ந்து 6வது நாளாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இதனால் சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஊரடங்கு காரணமாக பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவால், தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்ததே விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்தது. தற்போது வர்த்தகம் பொதுமுடக்க தளர்வுகளால் முழுவீச்சில் செயல்பட தொங்கி உள்ளதால் ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர் மதிப்புகள் உயர தொடங்கி உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை இன்றைய நிலவரம்!!

இதன் விளைவாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 15 ரூபாய் குறைந்து ரூ.4,574 க்கும், ஒரு சவரன் ரூ.120 குறைந்து ரூ.36,592 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை சில்லறை வர்த்தகத்தில் ரூ.64.70 ஆக உள்ளது. தங்கத்தின் விலை குறைந்து வருவது நகைப்பிரியர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here