பாண்டியன் ஸ்டோர்ஸில் ரீஎன்ட்ரி கொடுக்கும் மீனா – வீடியோ காலில் ஷூட்டிங்!!!

0
meena
meena

விஜய் டிவியில் சீரியல்கள் தற்போது டாப் ரேட்டிங்கில் போய்க் கொண்டிருக்கிறது என்றே கூறலாம். ஒரு பக்கம் பாரதி கண்ணம்மா, இன்னொரு பக்கம் பாண்டியன் ஸ்டோர்ஸ் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த மீனா திரும்பவும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல். அண்ணன் தம்பி பாசத்தை கதைக்களமாக கொண்டுள்ளதால் மக்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்தது. பாண்டியன் ஸ்டோர்ஸில் அனைவரையும் விட முல்லை கதிர் ஜோடிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

pandian store
pandian stores

முல்லை கதிர் ஜோடிக்காகவே சீரியல் பார்ப்பவர்களும் உண்டு. இத்தனை நாட்கள் குழந்தைகள் சத்தம் இல்லாத வீட்டில் மீனா கர்ப்படைந்தது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுல்ல, மீனா நிஜ வாழ்க்கையிலும் கர்ப்பமாக இருந்தார்.

pandian store
pandian stores

கடந்த எபிசோடுகளில் மீனாவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சியை விஜய் டிவி நட்சத்திரங்கள் அனைவரும் ஒன்று கூடி வெகு விமர்சையாக கொண்டாடி அசத்தினர். 1 மணி நேர தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸில் வளைகாப்பு நடந்து கொண்டிருக்கும் போதே மீனாவிற்கு பிரசவ வலி எடுக்க மருத்துவமனையில் அனுமதித்தனர்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

pandian store
pandian stores

சீரியலில் இவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. நிஜ வாழ்க்கையிலும் கர்ப்பமாக இருந்த மீனாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

View this post on Instagram

Luv your work?? Do wherever you're!!! Work from Home??

A post shared by Hema Rajkumar (@hemarajsathish) on

குழந்தை பிறந்தவுடன் பிரேக் எடுப்பார் என்று நினைத்தால் வீட்டில் இருந்த படியே நடித்து வருகிறார் மீனா. இதனை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தனது பணியை காதலிக்கும் ஒருவர் எங்கிருந்தாலும் அப்பணியை தொடருவார் என அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here