தமிழகத்தின் அடுத்த முதல்வரான ஸ்டாலின் – 7ம் தேதி பதவி ஏற்பு!!

0

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று அசத்தியுள்ளது திமுக கூட்டணி. தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்கும் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வர்:

தமிழகத்தில் பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நேற்று(மே 2) சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் போது பல்வேறு அதிரடி திருப்பங்கள் நடைபெற்றது வந்தது. தொடக்கத்தில் இருந்து கோவை தெற்கில் ஆதிக்கத்தை செலுத்தி வந்த கமல்ஹாசன் முடிவில் சிறிதளவு வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதேபோல் திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியிலும் தொடக்கத்தில் இருந்தே முன்னிலை வகித்து வந்தனர். இருவரும் அதிக அளவிலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தினர். முடிவில் திமுக கூட்டணி தனி பெரும்பான்மையுடன் தமிழகத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

‘மக்கள் அனைவரும் இரட்டை முகக்கவசங்களை அணியுங்கள்’ – மாநில முதல்வர் அதிரடி!!

திமுக கூட்டணி 159 தொகுதியில் வெற்றி பெற்றது. அதில் திமுக கட்சி 125 தொகுதியிலும் கூட்டணி கட்சிகள் 34 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 10 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது திமுக கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்கவுள்ளது. அதன்படி தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் வருகிற மே மாத 7ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here