‘மக்கள் அனைவரும் இரட்டை முகக்கவசங்களை அணியுங்கள்’ – மாநில முதல்வர் அதிரடி!!

0

நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தற்போது கேரளா மாநிலத்தில் பல புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை:

இந்தியாவில் தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா நோய்பரவல் மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் நாட்டில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டு தங்களது உயிரை இழந்து வருகின்றனர். கேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 37,199 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது புதிய பாதுகாப்பு நடவடிக்கை ஒன்றை கேரளா மாநில முதல்வர் பிரனாயி விஜயன் அறிவித்துள்ளார்.

14வது ஐபிஎல் தொடர் – கேப்டன் பதவியில் இருந்து அதிரடி நீக்கம்!!சோகத்தில் ரசிகர்கள்!!

அதன்படி பொது இடங்களில் மக்கள் அனைவரும் இரட்டை முக கவசங்களை அணிய வேண்டும் என்று கேரளா முதல்வர் பிரனாயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். பொது இடங்கள் மட்டுமல்லாமல் கடைகள், அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் மக்கள் இரட்டை முக கவசங்களை அணிய வேண்டும் என்றும் சமூக பிரமுகர்கள் மற்றும் திரை உலகினர் போன்றவர்கள் இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here