மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13 இல் தியேட்டரில் ரிலீஸ் – நடிகர் விஜய்க்கு தயாரிப்பாளர்கள் நன்றி!!

0

லாக்டவுன் காரணமாக நிலுவையில் உள்ள இளையதளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் கூறியுள்ளார்.

மாஸ்டர் திரைப்படம்

தமிழில் விஜய் நடிப்பில் உருவானது தான் மாஸ்டர் திரைப்படம். இதனை லோகேஷ் கனகராஜ் இயக்கி அனிருத் இசையமைக்கிறார். மேலும் விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். விஜய் சேதுபதியும் விஜயும் சந்திக்கும் காட்சிகள் மிரட்டியுள்ளதாக சென்சார் அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். இந்த படத்திற்கு U/A சான்றிதழும் வழங்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இந்த படத்தை ஓடிடியில் வெளியிடப்போவதாக கூறப்பட்டது. அந்த வெறும் வதந்தி தான் என இயக்குனர் லோகேஷ் தெளிவு படுத்தினார். இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தை பற்றி திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம் பேட்டியளித்துள்ளார். அதாவது ‘மாஸ்டர் திரைப்படம் கண்டிப்பாக திரையரங்குகளில் ஜனவரி 13 ஆம் தேதி வெளியிட போவதாக திரைப்பட தயாரிப்பாளர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்திருப்பதாக கூறியுள்ளார். மேலும் ஓடிடி தளத்தில் மாஸ்டர் படத்தை வெளியிட பலரும் விஜயை அணுகுய போதும் அவர் திரையரங்குகளில் தான் வெளியிட போவதாக உறுதியாக நின்றார்.

இதற்காக அவருக்கு நான் நன்றி சொல்கிறேன். இதே போல 100 சதவீதம் பேரை திரையரங்கில் அனுமதிக்க மனு கொடுத்திருந்தோம். மேலும் விஜயும் இதனை பற்றி பேச முதலமைச்சரை சந்தித்திருந்தார். மேலும் பொங்கல் தினத்தன்று கம்மி விலையில் கட்டணத்தையே நிர்ணயிப்போம். விஜயை போல ஏன் மற்ற நடிகர்கள் முடிவை எடுக்க மாற்றுகின்றனர்??’ என்றும் பேட்டியளித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here