‘சக்கர நாற்காலியில் அமர்ந்தாவது பிரச்சாரம் செய்வேன்’ – மம்தா அதிரடி!!

0

பிரச்சாரத்தின்போது மர்ம நபர்களால் தாக்கப்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளும் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜீ, சக்கர நாற்காலியில் அமர்ந்தாவது பிரச்சாரம் செய்வேன் என தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் மம்தா பானர்ஜீ

மேற்கு வங்க மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலையொட்டி அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜீ தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அந்த வகையில் பர்பா மெதினிபுர் மாவட்டத்தின் ரியாபாரா பகுதியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அவரை மர்ம நபர்கள் தாக்கியதாக மம்தா பரபரப்பான தகவல் ஒன்றை தெரிவித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ் அரசு மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

‘குக் வித் கோமாளியில் கலந்து கொள்ள மாட்டேன்’ – மணிமேகலை அதிர்ச்சி தகவல்!!

இந்நிலையில் மம்தா மருத்துவமனையில் இருந்தவாறே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘நேற்று பிரச்சாரம் முடித்து திரும்புகையில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டேன். அதில் கை, கால்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. சிகிச்சை முடிந்ததும் விரைவில் பணிக்கு புறப்படுவேன். சக்கர நாற்காலியில் அமர்ந்தாவது பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். அதுவரை அனைத்து தொண்டர்களும் அமைதி காக்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here