ஏப்ரல் 1 முதல் மாத சம்பளத்தில் ஏற்பட உள்ள மாற்றங்கள் – முழு விபரங்கள் இதோ!!

0

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்தியாவில் அமல்படுத்தப்பட உள்ள புதிய தொழிலாளர் சட்டம் மூலமாக அனைத்து தரப்பு தொழிலார்களின் சம்பளத்திலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

புதிய தொழிலாளர் சட்டம்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டது. New Wage Code Bill என்று கூறப்பட்ட அந்த சட்ட மசோதா வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது. இந்த சட்டம் முழங்க பல மாறுதல்கள் ஏற்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒருவரின் சம்பள பணத்தில் பல மாற்றங்கள் ஏற்பட உள்ளன. வருங்கால வாய்ப்பு நிதி அதிகமாகவும், நடப்பில் வழங்கப்படும் சம்பள பணம் குரைவாகவும் ஆவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சக்கர நாற்காலியில் அமர்ந்தாவது பிரச்சாரம் செய்வேன்’ – மம்தா அதிரடி!!

இந்த சட்டம் அமலுக்கு வந்ததற்கு பிறகு அல்லோவான்ஸ் என்று கூறப்படும் சம்பள விகிதம் 50 சதவீதத்திற்கு மேல் இருக்க கூடாது. அடிப்படை சம்பள விகிதம் 50 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும். இந்த புதிய நடைமுறை வந்ததற்கு பிறகு ஒருவரின் கிராச்சுட்டியின் அளவும் மாறிவிடும். தற்போது பின்பற்றபட்டு வரும் நடைமுறையில் ஒருவர் 5 ஆண்டுகள் பணிபுரிந்தால் தான் கிராச்சுட்டி வழங்கப்படும். ஆனால், புதிதாக அமல்படுத்தப்பட இருக்கும் சட்டம் மூலமாக கிராச்சுட்டி 1 வருடத்தில் கிடைத்து விடும் என்று கூறப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கூடுதலாக, ஒருவரின் வருங்கால வாய்ப்பு நிதி இந்த சட்டம் முழங்க அதிகரிக்கும். ஆனால், சம்பள பணம் குறைந்து விடும். இந்த சட்டம் மூலமாக நீண்ட கால பயன் அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பிஎஃப் மற்றும் கிராச்சுட்டியின் பங்களிப்பு ஒருவருக்கு அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here