முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்தால் என்ன?? நீதிமன்றம் சரமாரி கேள்வி!!

0

தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருக்கும் நபர்களை கைது செய்தால் என்ன?? என உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளது. மேலும் அபராதத் தொகைகளை உயர்த்தவும் பரிசீலிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பரவல்:

தமிழகத்தில் இதுவரை 6,30,408 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ள நிலையில் 9,917 பேர் உயிரிழந்து உள்ளனர். ஆறுதல் அளிக்கும் விதமாக 5,75,212 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தினசரி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதால் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊரடங்கில் வழங்கப்பட்ட அதிகளவிலான தளர்வுகளால் கொரோனா தொற்று அதிகரித்து உள்ளதாக நிபுணர்கள் கூறி உள்ளனர்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

மேலும் பொதுப்போக்குவரத்தை அனுமதித்துள்ள அரசு போதிய அளவில் பேருந்துகளை இயக்காததால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. மேலும் ஆட்டோக்களிலும் அதிகளவு பயணிகள் செல்வதாக புகார் அளித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு அபராதத் தொகையை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்த பரிந்துரை செய்துள்ளனர்.

அதுமட்டுமின்றி பொது இடங்களில் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருக்கும் நபர்களை கைது செய்தால் என்ன?? என கேள்வி எழுப்பி உள்ளனர். கொரோனா பரவலை தடுக்க வேறு என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்தும் அறிக்கை தர உத்தரவிட்டு உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here