‘கல்யாண வீடு’ சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணம் – நிச்சயதார்த்த போட்டோஸ் வைரல்!!

0
spoorthy-gowda
spoorthy-gowda

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியலான கல்யாண வீடு தொடரில் நாயகிக்கு தற்போது திருமணம் நிச்சயம் ஆகியுள்ளது. தற்போது தனது கணவருடன் விதவிதமாக எடுத்த போட்டவை வெளியிட்டுள்ளார். பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கல்யாண வீடு

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியலில் கல்யாண வீடு ஒன்று. இயக்குனரான திருமுருகனின் படைப்பு தான் இந்த கல்யாண வீடு. இவர் இயக்கிய 90s கிட்ஸ் விருப்பமான சீரியலான மெட்டி ஒலி நல்ல பிரபலத்தை அடைந்தது. மறுபடியும் ஒளிபரப்பானால் கூட முதல் தடவை பார்ப்பது போல தான் இருக்கும்.

spoorthi
spoorthi

அதன் பிறகு பல சீரியல்களை இயக்கினார் திருமுருகன். ஆனால் அனைத்திலும் அவர் கோபியாக தான் நடித்து வருகிறார். இப்பொழுது ஒளிபரப்பாகி வரும் சீரியலிலும் அவர் கோபியாக தான் நடித்து வருகிறார்.

spoorthi
spoorthi

இதில் இவருக்கு ஜோடியாக சூர்யா கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ஸ்பூர்த்தி கவுடா. கொரோனா காரணமாக ஷூட்டிங் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் சில நாட்களுக்கு சீரியல்கள் ஓடாமல் இருந்தது.

spoorthi
spoorthi

மறுபடியும் சீரியல் ஷூட்டிங் ஆரம்பித்த நிலையில் ஸ்பூர்தியால் வர முடியவில்லை. இதனால் சூர்யா என்ற கதாபாத்திரத்தில் கன்னிகா ரவி என்பவர் நடித்தார். இதனால் ஷாக் ஆன ரசிகர்கள் எங்க சூர்யா எங்கே?? என்று கேள்வி எழுப்பினர்.

spoorthi
spoorthi

அதற்கு ஸ்பூர்த்தி தனக்கு திருமணம் நடக்க போவதாகவும், இதனை நாள் தனக்கு கொடுத்த ஆதரவிற்கு நன்றி கூறியும் வீடியோவை வெளியிட்டார். இதனால் குஷியான ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்.  மேலும் தனது வருங்கால கணவருடன் எடுத்த போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here