Monday, May 13, 2024

இந்த ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு – இரண்டு பெண் விஞ்ஞானிகள் தேர்ந்தெடுப்பு!!

Must Read

இந்த ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் விருதுகள் இரண்டு பெண்களுக்கு பகிர்ந்தளிக்க நோபல் அமைப்பு முடிவு செய்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மருத்துவம் மற்றும் இயற்பியல் துறைகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதை அடுத்து தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நோபல் விருதுகள்:

கடந்த 1895 ஆம் ஆண்டில் இருந்து நோபல் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதுகள் வேதியியலாளர் நோபல் நினைவாக வழங்கப்படுகிறது. இது உலகின் உயரிய விருதாக கருதப்படுகிறது. இந்த விருதுகள் மருத்துவம், இயற்பியல், வேதியியல், அமைதி, இலக்கியம் மற்றும் பொருளாதாரம் போன்ற ஆறு துறைகளில் மகத்தான சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் 8 கோடிக்கும் அதிகமான பரிசு தொகை, தங்க முலாம் பூசிய பதக்கம் மற்றும் ஒரு சான்றிதழை பெறுவர்.

ரஜினியின் புதிய கட்சி குறித்த அறிவிப்பு எப்போது?? ஆவலில் ரசிகர்கள்!!!

அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே நகரில் வழங்கப்படும். மற்ற துறைகளுக்கான பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் வழங்கப்படும். கடந்த இரண்டு நாட்கள் மருத்துவம் மற்றும் இயற்பியல் துறைக்கு தேர்வானவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டன. இன்று வேதியியல் துறைக்கு தேர்வானவர்களின் விவரம் வெளியிடப்பட்டது. இந்த வருடம் இந்த துறைக்கு இரண்டு பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பெண் விஞ்ஞானிகளுக்கு விருதுகள்:

மரபணு மாற்றம் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டதற்காக பெண் விஞ்ஞானிகளான இம்மானுவெல்லே சார்பென்டியர் மற்றும் ஜெனிபர் ஏ. டவுனா ஆகிய இருவருக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன. பாக்டீரியத்தின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆய்வு செய்யும் போது மூலக்கூறினை கண்டுபிடித்துள்ளனர். மரபணு தொழில்நுட்பத்தின் கூர்மையான கருவிகளில் ஒன்றாக கருதப்படும் CRISPR / Cas9 மரபணு கத்தரிக்கோலை பயன்படுத்தி, விலங்குகள், தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகளின் டி.என்.ஏ.வை மிகத் துல்லியமாக மாற்ற முடியும்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

chemistry nobel prize 2020
chemistry nobel prize 2020

மூலக்கூறு அறிவியலில் இது ஒரு புரட்சியாக கருதப்படுகிறது. தாவர இனப்பெருக்கத்திற்கு புதிய வாய்ப்புகளை இது உருவாக்கும் என்றும் நம்பப்படுகிறது. இந்த அறிவிப்பினை நோபல் விருது அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அடுத்தடுத்த துறைகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட உள்ளன.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

CSK vs RR 2024: படுத்தே விட்டானய்யா.. ட்ரெண்டிங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் மீம்ஸ்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -