பாராசிட்டமால், கோழி சூப், எலுமிச்சை சாறு போதும் மீண்டு விடலாம்.! கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் பெண் பேட்டி.!

0

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் பெண் ஒருவர் குணடைந்துள்ளார். அதை பற்றி அவர் கூறுகையில் பாராசிட்டமால், கோழி சூப், எலுமிச்சை சாறு ஆகியவற்றைக் கொண்டே கொரோனா வைரஸை வெற்றிக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

டாக்டர் கிளார் ஜெராடா

பிரிட்டனில் தெற்கு லண்டனில் உள்ள கென்னிங்டனை சேர்ந்த லண்டன் டாக்டர் கிளார் ஜெராடா 60 வயதான இவர் பொது மருத்துவர்களின் ராயல் கல்லூரியின் (ராயல் காலேஜ் ஆஃப் ஜெனரல் பிராக்டிஷனர்ஸ்) முன்னாள் தலைவரும்கூட. நியூயார்க்கில் உள்ள கருத்தரங்கில் கலந்து கொள்ள சென்ற ஜெராடா லண்டன் திரும்பும்போது கொரோனவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

கொரோனா தொற்று

கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட ஜெராடா நோயின் தாக்கத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் படுத்த படுக்கையாக கிடந்தார். அதிகப்படியான சளி, மூட்டுவலி, நெஞ்சுவலி, தொண்டை புண், தலை சுற்றல், தலை குற்றல் எல்லாம் ஜெராடாவிற்கு இருந்தது. அதிலிருந்து மீண்டு வந்து விட்டார். அதில் அவர் கூறியதாவது, நான் முற்றிலும் சக்தியை இழந்து விட்டேன். மேலும் ஒரு தாளை கூட குனிந்து எடுக்க முடியாத நிலைமையில் இருந்தேன்.

கழிவறைக்கு செல்லும் நிமிடத்தை தவிர மீத நேரங்களில் படுத்த படுக்கையில் தான் கிடந்தேன். ஆனால் ஒரு நாளும் நான் உயிரே போய் விடுமோ என்று பயப்பட வில்லை. கொரோனாவில் ஏற்பட்ட வலி மட்டுமே உடல் ரணத்தை தந்தது.ஏன் மக்கள் இந்த கொரோனாவிற்கு இந்தளவுக்கு பயப்படுகின்றனர் என்று அப்பொழுது தான் புரிந்தது. பெரும்பாலானோர் என்னை போல் மீண்டு வர முடியும். நியூயார்க்கில் கருத்தரங்கில் கலந்து கொண்டு பிரிட்டன் திரும்பிய பிறகு எனக்கு உடல் சற்று சோர்வாகவே காணப்பட்டது. நான் நீண்ட நேர பயணத்தில் ஏற்பட்ட களைப்பு என்று நினைத்தேன். ஆனால் 2 நாட்களுக்கு பிறகு தான் எனக்கு தெரிந்தது இது கொரோனா என்று.

பாராசிட்டமால், கோழி சூப், எலுமிச்சைச் சாறு

ஏன் கணவர் தான் என்னை பார்த்துக்கொண்டார். கொரோனாவிலிருந்து நலம் பெற எனக்கொன்றும் பிரமாதமான மருந்துகள் எல்லாம் எதுவும் தேவைப்படவில்லை.

“ஒரு நாளில் மூன்று வேளைகளுக்கு இரண்டிரண்டு பாராசிட்டமால் மாத்திரைகள் மற்றும் எலுமிச்சைச் சாறு ஆகியவைதான் எனக்குத் தேவைப்பட்டன.

“எனக்கு மீண்டும் பசி எடுக்கச் செய்வதில் கடவுள் இயற்கையாகத் தந்த பெனிசிலினான கோழி சூப் பெரும் பங்காற்றியது. என் கணவர் என்னை விட்டு தள்ளியே இருந்தார். முகம் முழுவதும் முகக்கவசம் அணிந்தவாரே எனக்கு பல உதவிகளை செய்து வந்தார். இவ்வாறு தான் நான் கொரோனாவிலிருந்து மீண்டு வந்தேன். இதுவரை அனுபவித்ததிலேயே இது தான் மோசமான நோய் என்றும் கூறியிருந்தார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here