கொரோனா கோழிக்கு 1 கோடி ரூபாய் பரிசு – த.மு.ப சம்மேளனம் அறிவிப்பு..!

0

தமிழகத்தில் கோழிக்கறி மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக சமூகவலைதளங்களில் வந்த வதந்தியால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதை சரிசெய்யும் பொருட்டு கோழிக்கறி மற்றும் அதன் முட்டையில் இருந்து கொரோனா பரவுவதாக பரிசோதனை மூலம் நிரூபித்தால் அவருக்கு 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

வாட்ஸ்ஆப் வதந்தி..!

தமிழகத்தில் கோழி இறைச்சி மற்றும் அதன் முட்டையிலிருந்து கொரோனா வைரஸ் பரவுவதாக வாட்ஸ்ஆப்பில் வந்த வதந்தியால் அதன் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. வெளி மாநிலங்களுக்கு சத்துணவு முட்டைகளை ஏற்றுமதி செய்ய முடியாமல் சுமார் 5 கோடி முட்டைகள் நாமக்கலில் தேங்கி உள்ளன. மேலும் தமிழகம் முழுவதும் கோழிக்கறி வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனால் கோழிக்கறி, முட்டை சாப்பாடு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக பரிசோதனை மூலம் நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று முட்டைகோழி பண்ணையாளர்கள் சம்மேளனத் தலைவர் வாங்கிலி சுப்பிரமணி தெரிவித்து உள்ளார். ஏற்கனவே இந்த வதந்தி பரப்பிய நபர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here