தமிழகத்தில் ஜனவரி மாதம் ஊரடங்கு நீட்டிப்பு?? முதல்வர் முக்கிய ஆலோசனை!!

0
cmo of tamilnadu
cmo of tamilnadu

தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள நிலையில், இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் புதிய திரிபு வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் அங்கு கடும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் டிசம்பர் 31ம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடியாவுள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மருத்துவக் குழுவுடன் டிசம்பர் 28ம் தேதி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

ஊரடங்கு நீட்டிப்பா??

நாடு முழுவதும் கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஒவ்வொரு முறை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் போதும் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டன. முதல்வர் அவர்களும் மருத்துவ நிபுணர் குழு மற்றும் மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசித்த பிறகே இந்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதற்கிடையில் தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு இன்னும் 8 நாட்களில் முடிவடைய உள்ளது. மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

palanisami attend video conference

டிச.26 முதல் டோக்கன், புது 500 ரூபாய் நோட்டுகள் – பொங்கல் பரிசு 2021 அப்டேட்!!

இருப்பினும் பொங்கல் போன்ற பண்டிகை நாட்கள் நெருங்கி வருவதால், கொரோனா மேலும் பரவும் அச்சம் நிலவுகிறது. மேலும் இங்கிலாந்தில் இருந்து சென்னை வந்த ஒரு பயணிக்கும் தொற்று உறுதியாகி உள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வரும் டிசம்பர் 28ம் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here