கிராம கோவில் பூசாரிகளுக்கு சம்பள உயர்வு – அரசாணை வெளியீடு!!

0
Salary
Salary

கிராமத்தில் உள்ள கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியமாக ரூ.1000 வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அது ரூ.3000 மாக உயர்த்தி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சம்பள உயர்வு:

தமிழக கிராமங்களில் ஆயிரக்கணக்கான கோவில்கள் உள்ளன. பெரும்பான்மையான கோவில்கள் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நிலையில் , சில கோவில்கள் தனியார் வசம் உள்ளன. அறநிலையத் துறையின் கீழ் இயங்கி வரும் கோவில்களில் பணிபுரியும் பூசாரிகளுக்கு மாத சம்பளமாக ரூ.1000 மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், தங்களுக்கு சம்பள உயர்வு வேண்டும் என அவர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

டிச.26 முதல் டோக்கன், புது 500 ரூபாய் நோட்டுகள் – பொங்கல் பரிசு 2021 அப்டேட்!!

இது குறித்து பரிசீலித்த தமிழக முதல்வர் பழனிசாமி, கடந்த சட்டப்பேரவை கூட்டத்தின் போது 110 வது விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதன் மீதான அரசாணையில் தற்போது 1000 ரூபாயாக இருக்கும் சம்பளம் இனி 3000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி தமிழக கிராம பூசாரிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது என்றே கூறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here