டிச.26 முதல் டோக்கன், புது 500 ரூபாய் நோட்டுகள் – பொங்கல் பரிசு 2021 அப்டேட்!!

0

தமிழகத்தில் வரும் 2021ம் ஆண்டுக்கான பொங்கல் திருநாளை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2500 மற்றும் மளிகை பொருட்களுடன் கூடிய பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் டிசம்பர் 26ம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலுக்கு மத்தியில் கூட்டம் கூடுவதை தடுக்க கடந்த பல மாதங்களாக டோக்கன் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொங்கல் பரிசு குறித்து மேலும் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பொங்கல் பரிசு:

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பல நிறுவனங்கள் மூடப்பட்டு ஏராளாமானோர் வேலையிழந்து உரிய வருமானம் இன்றி அவதிப்பட்டனர். இதற்காக தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் மற்றும் 1000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு தொழில் துறைகள் செய்லபட தொடங்கி உள்ள நிலையில், பொங்கல் விழா நெருங்கி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வருடந்தோறும் தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிதியுதவி & பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். இம்முறை பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ரூ.2500, முழு கரும்பு உட்பட பரிசு பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்து உள்ளார். இதனை 5 ஆயிரமாக உயர்த்தி வழங்குமாறு எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. மேலும் கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்களின் வங்கிக்கணக்கில் பொங்கல் பரிசுத்தொகையை செலுத்த நடவடிக்கைகள் எடுக்கலாம் என பரிசீலிக்கப்பட்டது.

2021 ஜனவரி மாசம் வங்கிக்கு இத்தன நாள் ‘லீவு!!

ஆனால் இம்முறையும் ரொக்கம் அவரவர் கையில் வழங்கப்பட உள்ளது. அதற்காக 5,158 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ள தமிழக அரசு ரிசர்வ் வங்கியிடம் புது 500 ரூபாய் நோட்டுகளை பெற்றுள்ளது. எனவே பொதுமக்களுக்கு 2500 ரூபாய், ஐந்து 500 ரூபாய் நோட்டுகளாக வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இதற்கான டோக்கன் வரும் டிசம்பர் 26ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here