ரூ.10 முதல் 20 ஆயிரம் வரை., ஜன.1 முதல் குப்பைக்கு தனி கட்டணம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!

0

ஜனவரி 1 ம் தேதி முதல் சொத்து வரியுடன் சேர்த்து, குப்பைக்கு தனி கட்டணம் செலுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மை விதிகளில் திருத்தம் செய்து கடந்த பிப்ரவரி மாதம் அரசாணை வெளியிட்டது. சென்னையின் திடக்கழிவு மேலாண்மை மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் 5 ஆயிரம் டன் குப்பைகளை சராசரியாக தினமும் சேகரிக்கிறது. இதில், 7 மண்டலங்களை தனியாரிடம் ஒப்படைத்தது. 4 மண்டலங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தனி கட்டணம்:

கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்த புதிய அரசாணை நடைமுறைக்கு வரவில்லை. அரசு பல முறைகளை கையாண்டும் சென்னையில் குப்பைகளை சேகரிக்கும் பணி முறையாக செயல்படவில்லை என்ற ஆதங்கமே மக்களிடம் உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் புதிய அரசாணையில் படி திடக்கழிவு மேலாண்மை செயல்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதன்படி, வீடுகளுக்கு ஒரு மாதத்திற்கு குப்பை கொட்டுவதற்கு ரூ.10 முதல் ரூ.100, வணிக நிறுவனங்களுக்கு ரூ. 1000 முதல் ரூ.5000 வரையும், நட்சத்திர விடுதிகளுக்கு மாதம் ரூ.300 முதல் ரூ. 3000 வரையும், தியேட்டர்களுக்கு ரூ. 750 முதல் 2000 வரையும், அரசு அலுவலகங்களுக்கு ரூ.300 முதல் ரூ.3000 வரையும் மற்ற கடைகளுக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரையும் கட்டணம் வசூலிக்கப்படும்.

தமிழகத்தில் ஜனவரி மாதம் ஊரடங்கு நீட்டிப்பு?? முதல்வர் முக்கிய ஆலோசனை!!

பொது இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு ரூ. 5000 முதல் ரூ.20,000 வரையும், மருத்துவமனை மற்றும் நர்சிங் ஹோம் ரூ. 2000 முதல் ரூ.4000 வரையும், தனியார் பள்ளிகளுக்கு ரூ.500 முதல் ரூ. 3000 வரையும் குப்பை கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்த விதியை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், மேலும் குப்பைகளை தனித்தனியாக பிரித்து வழங்காதவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் இந்த கட்டணத்தை ஜனவரி1ம் தேதி முதல் சொத்து வரியுடன் சேர்த்து செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here