கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி?? வெளியான பரபர தகவல்!!

0

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், மக்களிடையே நிலவி வரும் தயக்கத்தினையும், அச்சத்தினையும் போக்கும் விதமாக பிரதமர் மோடி இரண்டாம் கட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தடுப்பூசி:

நாடுமுழுவதும் முதற்கட்டமாக கோவி ஷீல்டு என பெயரிடப்பட்ட கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கும் செலுத்தப்பட்ட இந்த ஊசியானது தற்போது பொதுமக்களுக்கும் செலுத்தப்படுகிறது.

இனி மதுபானத்திற்கு கட்டாய பில் – உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!!

இதுவரையில் 86 பேர் இந்த ஊசியினால் பக்க விளைவுகளுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இந்த தடுப்பு மருந்து பற்றி மக்களிடையே அச்சமும் சந்தேகங்களும் எழுந்தபடியே உள்ளன. இதன் காரணமாகவே கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் நிர்ணயித்த அளவை எட்ட முடியவில்லை. இந்த அச்சத்தையும் சந்தேகத்தையும் போக்கி புதுமக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்க பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு முன்னுதாரணமாக திகழ வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

சிஎஸ்கே.,வில் இருந்து ஜாதவை விடுவிக்க தோனி தயக்கம்?? கடைசி நிமிட பரபர தகவல்கள்!!

எனவே இரண்டாம் கட்டமாக தடுப்பூசி வழங்கப்படும் பொது பிரதமர் செலுத்திக்கொள்வார் எனவும், அவருடன் சேர்த்து மாநில முதல்வர்கள், பாராளு மன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், வருவாய் துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் ஆகியோருக்கும் துப்புரவு பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here