பேரறிவாளன் விடுதலை வழக்கு – 3 முதல் 4 நாட்களில் ஆளுநர் முடிவு!!

0

பேரறிவாளன் தனக்கு விடுதலை வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தற்போது இதுகுறித்து கூறிய நீதிமன்றம் 3 முதல் 4 நாட்களில் ஆளுநர் இதைப்பற்றி முடிவெடுப்பார் என்று தெரிவித்துள்ளது.

பேரறிவாளன்:

ராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக பேரரறிவாளன், நளினி போன்றோர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான நளினிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அவருக்கு ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளனர். தற்போது பேரறிவாளன் தரப்பில் தனக்கு விடுதலை வேண்டும் என்று கூறி மனு தாக்கல் செய்துள்ளனர். அவரது தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் கூறுகையில் விடுதலை செய்வது குறித்து ஆளுநர் முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அனால் இதனை எதிர்த்து இதுவரை மத்திய அரசு எந்த ஒரு மனுவையும் தாக்கல் செய்யவில்லை. மேலும் பேரறிவாளன் கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். அவரது உடல் நலம் குறித்து சரியான தகவல் ஏதும் இல்லை என்று கூறி தனது வாதங்களை தொடங்கினர். மேலும் நளினியின் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது ஆளுநர் தான்.

அதேபோல் தற்போது பேரறிவாளன் விடுதலை குறித்தும் ஆளுநர் முடிவு எடுக்கலாம் என்று கூறினார். மேலும் இதுகுறித்து சிபிஐ ஏற்கனவே விளக்கமளித்ததாவது,” எங்களுக்கும் ஆளுநர் இதைப்பற்றி முடிவு கூறாமல் இருப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளது என்பதை வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் காமராஜ் உடல்நிலையில் முன்னேற்றம் – மருத்துவமனை அறிவிப்பு!!

மேலும் தொடர்ந்து வாதாடிய மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜ் கூறுகையில், பேரறிவாளன் விடுதலை குறித்து குடியரசு தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று அதிரடியாக கூறினார். அப்போது ஆளுநர் முடிவெடுக்க முடியுமா?? அல்ல குடியரசு தலைவர் முடிவெடுக்கமுடியுமா?? என்ற குழப்பம் அங்கு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து இந்த வழக்கை இன்று மதியம் 2 மணிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். மதியம் விசாரணை தொடங்கிய போது பேரறிவாளன் விடுதலை குறித்து 3 முதல் 4 நாட்களுக்குள் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் என மத்திய அரசு தெரிவித்தது. குடியரசு தலைவர் தான் இது குறித்து முடிவெடுப்பார் என்று கூறிய மத்திய அரசு தற்போது தனது முடிவை மாற்றியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here