அமைச்சர் காமராஜ் உடல்நிலையில் முன்னேற்றம் – மருத்துவமனை அறிவிப்பு!!

0

உணவுத்துறை அமைச்சரான காமராஜ் கொரோனவால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்களின் தீவிர சிகிச்சையினால் தற்போது இவரது உடல் நலம் முன்னேறியுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

காமராஜ்:

இவர் கடந்த 2011ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அப்போது அவர் உணவுத்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் அதிமுக கட்சியை சார்ந்தவர். இவர் கடந்த 2016ம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் உணவுத்துறை அதிகாரியாக நியமனம் ஆனார். கடந்த ஆண்டு கொரோனா காலம் என்பதால் கொரோனா வைரஸ் ஏழை மக்கள், தொழில் முனைவோர், அரசியல் வாதிகள், சினிமா பிரபலங்கள் என அனைவரையும் தாக்கியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதில் பல அமைச்சர்களும் கொரோனாவால் தாக்கப்பட்டு, பின்பு குணமடைந்து வீடு திரும்பினார். அந்த வகையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கடந்த 6ம் தேதி அன்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். பின்பு அவர் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். தற்போது அவர் எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல் நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது எம்.ஜி.எம் மருத்துவமனை.

சிஎஸ்கே.,வில் இருந்து ஜாதவை விடுவிக்க தோனி தயக்கம்?? கடைசி நிமிட பரபர தகவல்கள்!!

அவர்கள் கூறிய அறிக்கையில் அமைச்சரின் உடல் நிலை சீராக உள்ளது. மேலும் அவருக்கு எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று விளக்கியுள்ளனர். மேலும் காமராஜுக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று எம்.ஜி.எம் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here