இனி மதுபானத்திற்கு கட்டாய பில் – உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!!

0

இனி மதுக்கடைகளில் குடிமகன்கள் வாங்கும் மதுபானத்திற்கு கட்டாயமாக பில் வழங்கவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

மதுபானம்:

சில இடங்களில் மது விற்பனை செய்பவர்கள் தங்கள் எண்ணத்திற்கேற்ப மதுபானத்தை விலையை அதிகமாக விற்பனை செய்து வந்தனர் இதனை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு தரப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தற்போது இதுகுறித்து தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ராஜேஸ்வரி பிரியா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஓர் வழக்கை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் சந்தோஷ் மற்றும் ஆனந்தி தலைமையில் நடைபெற்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இனி கட்டாயமாக பில்:

தற்போது இதுகுறித்து கூறிய நீதிபதிகள், அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யும் பிரதிநிதிகள் மீது துறை சம்பந்தமான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மதுபானம் விற்பனை குறித்து சரியான விதிமுறையை பின்பற்ற வேண்டும். விதிகளை மீறுபவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு டாஸ்மாக் மேலாண் இயக்குனருக்கு நீதிமன்றம் ஆணையிடப்பட்டது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எடுத்த புதிய முயற்சி – ரசிகர்களிடம் வரவேற்பை பெறுமா??

மேலும் இனி மதுபானம் வாங்குபவர்களுக்கு சரியான முறையில் கண்டிப்பாக ரசிது வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து அரசு மதுபான கடைகளில் மதுபானங்களின் விலை பட்டியல் கட்டாயமாக வைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை யாரேனும் செய்ய தவறினால் அவர்கள் மீது சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here