சிஎஸ்கே.,வில் இருந்து ஜாதவை விடுவிக்க தோனி தயக்கம்?? கடைசி நிமிட பரபர தகவல்கள்!!

0

சிஎஸ்கே அணி இந்த ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடருக்காக தங்களது அணியில் இருந்து தேவையில்லாத வீரர்களை விடுத்துள்ளனர். அதில் கேதர் ஜாதவை விடுவிக்க தோனி தயக்கம் கட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல்:

தற்போது இந்தியாவில் வைத்து வரும் ஏப்ரல் முதல் மே மதம் வரை 14வது ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு மெகா ஏலம் இல்லாததால் அடுத்தமாதம் 11ம் தேதி அன்று மினி ஏலத்தை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை விடுவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு சிஎஸ்கே அணியின் மோசமான பார்மினால் இந்த ஆண்டு சிஎஸ்கே அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தயங்கிய தோனி:

அனைவரின் எதிர்பார்ப்பு படி சிஎஸ்கே அணியில் இருந்து சாவ்லா, ஹர்பஜன் என மூத்த வீரர்களை சிஎஸ்கே அணி விடுவித்தது. ஆனால் இதில் கேதர் ஜாதவை விடுவிக்க தோனி தயக்கம் கட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தோனி மற்றும் கேதர் இருவரும் நல்ல நண்பர்கள். மேலும் ஜாதவை தோனி பல முறை ஊக்கமளித்து வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தற்போது நடந்துகொண்டிருக்கும் சையது முஸ்தாக் அலி கோப்பை போட்டியில் கேதர் ஜாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவி வருகிறார்.

அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை – வானிலை மையம் தகவல்!!

இதனையெல்லாம் கவனித்த தோனி ஜாதவை விடுவிக்க தயக்கம் காட்டினார். ஆனால் ஜாதவை அணியில் சேர்க்க சிஎஸ்கே நிர்வாகம் ஒத்துழைக்கவில்லை. மேலும் இவர் பார்மிற்கு திரும்புவார் என்று நம்பி ரூ. 7.8 கோடி ரூபாயை செலவு செய்ய முடியாது என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. முடிவில் சிஎஸ்கே அணி ஜாதவை விடிவித்ததாக அறிவித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இவரது மோசமான பார்மினால் இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் இவரை தேர்வு செய்யாது என்று சிலர் கூறிவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here