இட்லி, தோசைக்கு தொட்டுக்க இந்த ரெசிபியை மட்டும் செஞ்சு பாருங்க., சுவை வேற லெவல்., மிச்சமில்லாமல் சாப்பிடுவீங்க!!

0
இட்லி, தோசைக்கு தொட்டுக்க இந்த ரெசிபியை மட்டும் செஞ்சு பாருங்க., சுவை வேற லெவல்., மிச்சமில்லாமல் சாப்பிடுவீங்க!!
இட்லி, தோசைக்கு தொட்டுக்க இந்த ரெசிபியை மட்டும் செஞ்சு பாருங்க., சுவை வேற லெவல்., மிச்சமில்லாமல் சாப்பிடுவீங்க!!

பொதுவாக வெண்டைக்காயில் நாம் குழம்பு, பொரியல் போன்றவற்றைத் தான் செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் இப்போது வித்தியாசமான முறையில் சுவையான ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தேவையான பொருட்கள்;

  • நிலக்கடலை – 100 கிராம்
  • வெண்டைக்காய் – 250 கிராம்
  • வெந்தயம் – 1 டீஸ்பூன்
  • காய்ந்த மல்லி விதைகள் – 1 டீஸ்பூன்
  • வரமிளகாய் – 10
  • வெள்ளை பூண்டு – 4
  • கடுகு – 1 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை -சிறிதளவு
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • தக்காளி – 2
  • பெருங்காயம் – 1 டீஸ்பூன்
  • புளி – நெல்லிக்காய் அளவு
  • எண்ணெய் – 50 கிராம்

செய்முறை விளக்கம்;

இந்த ரெசிபி தயாரிப்பதற்க்கு ஒரு கடாயில் நிலக்கடலை & பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் மீண்டும் கடாயை எடுத்து அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய், போட்டு வதக்கி மிக்ஸி ஜாரில் மாற்றி கொள்ளவும்.

மேலும் சிறு துண்டுகளாக நறுக்கிய வெண்டைக்காயை கடாயில் போட்டு அதோடு தக்காளி & புளி சேர்த்து 5 நிமிடம் வதக்கி கொள்ளவும். இப்போது இதையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து கொள்ளவும். மேலும் வறுத்த நிலக்கடலையை அரைத்து இதில் மிக்ஸ் செய்து கொள்ளவும்.

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட போதிய அளவு இல்லை., கர்நாடக முதல்வர் பரபரப்பான அறிவிப்பு!!!

இப்போது ஒரு கடாயில் எண்ணெய் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, சிறிதளவு பெருங்காயத்தூள், வரமிளகாய் போட்டு தாளிக்கவும். மேலும் இதை நாம் அரைத்து வைத்துள்ளத்தில் சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது நாம் தயார் செய்து வைத்துள்ள இந்த ரெசிபியை சுட சுட சாதம், இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here