Saturday, May 18, 2024

சீன ராணுவம் எல்லையில் அத்துமீறக்கூடாது – ராஜ்நாத் சிங் திட்டவட்டம்!!

Must Read

சீன ராணுவம் எல்லையில் ஒப்பந்தத்தை மீறி அத்துமீற கூடாது என்று மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பங்கேற்ற கூட்டத்தில் சீன பாதுகாப்புத்துறையிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

லடாக் விவகாரம்:

கடந்த மே மாதம் ஆரம்பித்தது சீன-இந்தியா எல்லை பிரச்னை. நமது எல்லை பகுதியான லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி உள்நுழைந்து இரு ராணுவத்தினருக்கு மோதல் ஏற்பட்டது, அதில் நமது ராணுவ வீரர்கள் 20க்கும் அதிகமானோர் வீரமரணம் அடைந்தனர். சீன ராணுவத்தில் இருந்த 45 பேர் பலியாகினர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்தது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

இதனை சரி செய்ய இரு நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை மாஸ்க்கோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இன்று நடைபெற்றது.

இந்த மாநாட்டில் இந்திய அரசு சார்பில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார், சீன அரசு சார்பில் அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் விங் பென்க்ரி பங்கேற்றார். மே மாதத்தில் நடைபெற்ற மோதலுக்கு அடுத்து முதன்முதலாக இந்த பேச்சுவார்த்தை இருநாடுகளுக்கும் இடையே நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை சீனப்பாதுகாப்புத்துறையின் வேண்டுகோளின்படி நடைபெற்றுள்ளது.

அமைச்சர் திட்டவட்டம்:

அதில் ராஜ்நாத் சிங் பேசியதாவது “இந்தியாவின் நம்பகத்தன்மை மற்றும் இறையாண்மையை பாதுகாக்க இந்திய ராணுவம் போராடும்.”

நான் விஷாலுடன் கிசுகிசுக்கப்பட்டது உண்மை தான்

“பேச்சவார்த்தையில் கூறப்பட்ட ஒப்பந்தத்தை மீறி சீன ராணுவம் எல்லையில் ராணுவத்தினரை குவிக்க கூடாது” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

CSK vs RCB 2024: முக்கிய போட்டியில் இணையும் ‘இந்தியன் 2’ படக்குழு.. வெளியான முக்கிய அப்டேட்!!

IPL தொடரின் 17வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இன்று  (மே 18) நடைபெறும் முக்கிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -