‘ஆம் நான் காதலிக்கிறேன்’ – தனது காதலை வெளியிட்ட ராஷ்மிகா மந்தனா!!

0
Rashmika-Mandanna

கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா தெலுங்கு திரையுலகில் கொடிகட்டி பறந்து வருகிறார். தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது காதலை பற்றி கூறியுள்ளார்.

ராஷ்மிகா மந்தனா

கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா தெலுங்கிலும் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது உள்ள இளைஞர்களின் கனவுக்கன்னி என்றே கூறலாம். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் அடித்தது. தெலுங்கில் அறிமுகமான புதிதிலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

Rashmika-Mandanna
Rashmika-Mandanna

இப்படி இருக்க அவரின் பெயர் நிலைக்கும் முன்னே அவரை பற்றிய கிசுகிசுக்களும் வெளியாகின. அதாவது அவர் யாரையோ காதலிக்கிறார் என்றும் அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது என்றும் பல வதந்திகள் அவரை பற்றி எழுந்துள்ளது. இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

rashmika mandanna
rashmika mandanna

அதில் அவர் ஆம் நான் காதலிக்கிறேன் தனிமையையே காதலிக்கிறேன். நீங்கள் உங்கள் காதலருடன் இருக்கும் தனிமையை விட நீங்கள் தனிமையில் இருப்பதை ரசிக்கும் போது அந்த மகிழ்ச்சி உங்கள் காதலருடன் தனிமையில் இருப்பதை விட அதிகம் என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here