இனி முல்லையாக நடிக்கப் போவது இவர் தான் – வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!!

0

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலைக்கு பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் யார் நடிப்பார் என்ற கேள்வி அனைவர்க்கும் எழுந்தது. மேலும் முல்லையாக நடிக்கப் போவதாக சிலரின் பெயரும் சமூக வலைத்தளங்களில் உலாவியது. இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் காவியா தான் முல்லையாக நடிக்கப் போவதாக உறுதியாகியுள்ளது. ஷூட்டிங்கில் எடுத்த சில புகைப்படங்கள் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. வெள்ளித்திரையில் மட்டுமே காட்டப்பட்ட அண்ணன் தம்பி பாசத்தை முதன்முதலாக சீரியலில் எடுக்கப்பட்டதால் அமோக வரவேற்பு கிடைத்தது. அதுவும் கதிர் முல்லைக்காக தான் இந்த சீரியலை முக்கியமாக பார்த்ததே. பிடிக்காமல் திருமணம் செய்து கொண்ட இருவர் நாளடைவில் காதல் வயப்படுவதே இந்த இந்த கதையின் சுவாரசியம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சின்னத்திரை நடிகை சித்ரா இந்த சீரியலில் முல்லையாகவே வாழ்ந்திருப்பார். இந்த சீரியல் மூலம் எக்கச்சக்க ரசிகர்களை பெற்றார். இப்படி புகழின் உச்சிக்கு போய்க்கொண்டிருந்த சித்ரா தற்கொலை செய்து கொண்டது அவரது ரசிகர்கள் பலரையும் பாதித்துள்ளது. சித்ரா இறந்ததை அடுத்து பல மர்மங்களும் வெளிவருகின்றன. சித்ரா இறந்ததற்கு பிறகு முல்லை கதாபாத்திரத்தில் வேறு யாரையும் வைத்து எங்களால் பார்க்க முடியாது என்று பலரும் கதறினர்.

ஆனால் சீரியலில் அப்படி செய்யமுடியாது அல்லவா. கண்டிப்பாக வேறு ஒருவரை முல்லையாக நடிக்க வைக்க வேண்டும் என சீரியல் தரப்பில் இருந்து சொல்லப்பட்டது. ஆரம்பத்தில் சித்ராவின் தோழியான சரண்யா துராடி நடிப்பதாக கூறினர். ஆனால் அதனை அவர் மறுத்து விட்டார். பிறகு பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணியாக நடிக்கும் காவியா இதை முல்லையாக நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது.

முதன்முதலாக அண்ணன், அண்ணி மீது கோபப்படும் ஜீவா!!

ஆனால் இது உண்மையா?? பொய்யா?? என்று மக்கள் குழம்பிக்கொண்டு தான் இருந்தனர். இந்நிலையில் காவியா பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. முல்லை போலவே உடை அணிந்து மீனாவின் அம்மாவாகிய கலையுடன் போட்டோ எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் யாவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here