இங்கிலாந்தில் இருந்து டெல்லி வந்தவர்களுக்கு கொரோனா உறுதி – புதிய வகையா?? பொதுமக்கள் அச்சம்!!

0

இங்கிலாந்து நாட்டில் இருந்து டெல்லிக்கு வந்த 200 க்கும் அதிகமான பயணிகளில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு இங்கிலாந்து மக்களிடையே பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பாக இருக்குமோ என்று அதிகாரிகள் சந்தேகம் அடைந்துள்ளனர்.

புதிய வகை கொரோனா:

இங்கிலாந்து நாட்டில் சமீப நாட்களாக வேகமாக கொரோனா பரவி வந்தது. அதனை ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அது புதிய வகை கொரோனா வைரஸ் என்று கண்டறியப்பட்டது. இது இங்கிலாந்து நாட்டின் தெற்கு பகுதியில் அதிகமாக பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இதனை அடுத்து அந்த நாட்டில் கடுமையான பொது முடக்க வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மக்கள் பொது இடங்களில் சந்திக்கவோ, கூட்டம் கூடவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த பரவல் அச்சம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கிலாந்தில் இருந்து வரும் விமான சேவைகளை ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்ற மத்திய அரசு இன்று முதல் வரும் 31 ஆம் தேதி வரை இங்கிலாந்தில் இருந்து விமானங்கள் இந்தியாவிற்கு வர தடை விதித்தது.

பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் மிக உயரிய விருது !!

இந்த நிலையில் டெல்லிக்கு நேற்று இங்கிலாந்தில் இருந்து 226 பயணிகள் விமானம் மூலமாக வந்திறங்கினர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இங்கிலாந்து நாட்டில் வேகமாக பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றாக இருக்குமோ என்று அதிகாரிகள் சந்தேகின்றனர். இதனால் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here