ரூ.4 ஆயிரம் கடன், ஆன்லைன் ஆப் ஏற்படுத்திய அவமானம் – இளைஞர் தற்கொலை!!

0

ஆன்லைன் ஆப்பில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் அந்த நிறுவனம் ஏற்படுத்திய அவமான செயலால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். தற்போது அந்த ஆப் மீது நடவடிக்கை எடுக்குமாறு உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடனால் ஏற்படும் துயரம்:

தற்போது நாட்டில் நிறைய தற்கொலை சம்பவங்கள் ஏற்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இளைஞர்களே அதிகமாக தற்கொலை செய்து வருவது வேதனைக்குரியதே. அதுமட்டுமல்லாமல் ஏழை எளிய மக்களுக்கு சிலர் கந்து வட்டி மீட்டர் வட்டி போன்ற அளவுக்கு மீறிய வட்டிக்கு பணத்தை குடுத்து வசூலித்து வருகின்றனர். அரசு என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் இந்த செயல்கள் இன்னும் அரங்கேறி தான் வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் அதற்காக நடக்கும் தற்கொலைகளும் இன்னும் கொறைஞ்ச பாடு இல்லை. கடன் கொடுத்தோர் வட்டிக்காக கடன் வாங்கியவர்களை அசிங்க படுத்தி அவர்களை துன்புறுத்தி வட்டியை வசூலிப்பது வழக்கமாகிவிட்டது. அதேபோல் தற்போது ஆன்லைனில் கடன் பெறும் வசதி வந்துள்ளது.

மேலும் இதற்கு நமது போனில் கேலரி காண்டக்ட் போன்றவற்றை அனுமதித்தால் மட்டுமே நாம் கடன் பெற முடியும். மேலும் இதனால் அந்த ஆப் நிறுவனம் கடன்பெறுபவர்களின் சொந்த தகவல்களை சேமித்து வைத்துக்கொண்டு அதிக வட்டியை கூறி அதை செலுத்த முடியவில்லை என்றல் இவை அனைத்தையும் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி வருகிறது. தற்போது இதேபோல் சம்பவம் தான் அரங்கேறியுள்ளது.

ஆன்லைன் ஆப்பில் கடன்:

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பழையனூர் சாலை கிராமத்தை சேர்ந்தவர் விவேக் (27) என்ற ரங்கநாதன். இவர் மாமண்டூரில் உள்ள தனியார் மருந்து கம்பெனியில் லோடுமேன் ஆக பணிபுரிந்து வருகிறார். அவர் தனது தந்தையின் மருத்துவ செலவிற்காக ஆன்லைனில் தனியார் ஆப் மூலம் ரூபாய் 4000 கடன் பெற்றுள்ளார். தற்போது அவரால் அந்த கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. கடனை வசூலிப்பதாக அந்த நிறுவனம் எடுத்த முடிவு அனைவரையும் கோபப்படுத்தியுள்ளது.

இனி முல்லையாக நடிக்கப் போவது இவர் தான் – வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!!

கடன் கொடுத்த நிறுவனம் கஸ்டமர் கேர் மூலம் இவரை தொடர்பு கொண்டு கடனை திருப்பி செலுத்துமாறு கூறியுள்ளது, இல்லையெனில் நீங்கள் கடன் பெற்று திருப்பி செலுத்தவில்லை என்னும் செய்தியை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பி விடுவோம் என்று மிரட்டி வந்தது. சொன்னது போலவே அந்த நிறுவனம் அவரது நண்பர்களுக்கு குறுச்செய்தி அனுப்பியுள்ளது.

இதனால் அவரது நண்பர்கள் அவரை தொடர்பு கொண்டு கேட்டறிந்தனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ரங்கநாதன் தனது கிராமத்தில் கிணத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவரது உறவினர்கள் அந்த தனியார் ஆப் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போராடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here