பிரபல தமிழ் விளையாட்டு வர்ணனையாளர் ஜப்பார் மரணம் – ரசிகர்கள் வருத்தம்!!

0

விளையாட்டுகளை தனது காந்த குரலால் வர்ணனை செய்த சாத்தான்குளம் ஜப்பார் தந்து 81 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்துள்ளார். அவருக்கு பலரும் தங்களது அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர்.

விளையாட்டு வர்ணனையாளர்:

விளையாட்டுகள் ஒரு காலம் வரை ஆங்கிலத்தில் மட்டுமே வர்ணனை செய்யப்பட்டு வந்தது. அந்த கோட்பாட்டை உடைத்து முதன் முதலாக செந்தமிழ் மொழியான தமிழில் வர்ணனை செய்தவர் அப்துல் ஜப்பார். தனது சிறு வயது முதலே ரேடியோ கேட்பதில் ஆர்வம் காட்டியுள்ளார். இந்த ஆர்வம் அவரை நிகழ்ச்சிகள் குறித்த விமர்சனங்களை கடிதம் வாயிலாக எழுத தூண்டியுள்ளது. இது அவருக்கு வர்ணனையாளர் ஆகும் வாய்ப்பினையும் பெற்று தந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழ்நாடு – கேரளா அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பைக்கான போட்டியை வர்ணனை செய்ய அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை அடுத்து அவர் தமிழில் விளையாட்டுகளை வர்ணனை செய்ய துவங்கியுள்ளார். அதன் பிறகு ஆல் இந்தியா ரேடியோ மூலமாக தமிழில் வர்ணனை செய்து வந்துள்ளார். படிப்படியாக உயர்ந்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள், டெஸ்ட் போட்டிகள் என்று அனைத்திற்கும் வர்ணனையாளராக செயல்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் இருந்து டெல்லி வந்தவர்களுக்கு கொரோனா உறுதி!!

2004 வரை வர்ணனையாளராக செயல்பட்ட அவர் அதன் பிறகு ESPN, ஐபிசி போன்ற சர்வதேச ஊடக நிறுவனங்களில் கூட செயல்பட்டு வந்துள்ளார். இப்படியாக தனது காந்த குரல் காரணமாக பலரை ஈர்த்த அப்துல் ஜப்பார் இன்று தனது 81 வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக இன்று மரணம் அடைந்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்தும் வருகின்றனர். நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here