யப்பா..,மாரி செல்வராஜ் என்னையா படம் பண்ணிருக்க – கர்ணன் பட டீஸர் “ரெஸ்பான்ஸ்”!!

0

தனுஷ் நடிப்பில் தற்போது வெளியிட தயாராக இருக்கும் திரைப்படம் தான், “கர்ணன்”. இந்த திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று இரவு வெளியாகியது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து பல வித ரெஸ்பான்ஸ் வந்த வண்ணம் உள்ளது.

“கர்ணன்” திரைப்படம்

தமிழ் சினிமாவில் தற்போது பல மாற்றங்கள் வந்த வண்ணம் உள்ளது. காரணம், ஆரம்பத்தில் அனைத்து தரப்பு இயக்குனர்களும் ஒரே மாதிரியான கதை களத்தினை தேர்ந்தெடுத்து தான் இயக்கி வந்தனர். இதனை அடுத்து தற்போது சமூக பிரச்சனைகள், இன்று வரை பின்பற்றபட்டு வரும் சாதி பிரச்சனைகள் என்று வித்தியாசமான கதைக்களத்தில் திரைப்படங்களை இயக்கி வருகிறார்கள்.

இந்த வயசுல இந்த ரீல்ஸ் எல்லாம் தேவையா?? வனிதாவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!!

இதற்கு ஆரம்ப புள்ளி வைத்தவர் தான் இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் முதன் முதலாக “பரியேறும் பெருமாள்” திரைப்படத்தினை இயக்கினார். இந்த திரைப்படம் இன்று வரை பின்பற்றப்பட்டு வரும் சாதி பிரச்சனையை குறித்து அழகாக எடுத்துரைத்தது. அவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனை அடுத்து இவர் தற்போது 1980 ஆண்டுகளில் நடைபெற்ற ஒரு கதையினை மையமாக கொண்டு ஒரு திரைப்படத்தினை இயக்கி உள்ளார்.

அந்த திரைப்படம் தான் “கர்ணன்” இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். நடிகர் தனுஷ் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் பாடல்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது. இப்படியான சூழலில் இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தனுஷ் இந்த ட்ரைலரில் கடைசியில் தான் வருவார். ஆனாலும், ரசிகர்கள் அனைவரும் அவரது கண் பார்வையே அந்த அளவிற்கு இருக்கிறது என்று புகழ்ந்து வருகின்றனர். அதே போல் கண்டிப்பாக இந்த படத்திற்காக தனுஷ் தேசிய விருது வாங்குவார் என்றும் தெரிவித்து வருகின்றனர் வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here