இந்த வயசுல இந்த ரீல்ஸ் எல்லாம் தேவையா?? வனிதாவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!!

0
vanitha

நடிகை வனிதா விஜயகுமார் கலர் கலரான உடையணிந்து, மாஸ்டர் படத்தின் ‘அந்த கண்ண பாத்தாக்கா’ என்ற பாடலுக்கு ரீல்ஸ் செய்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.

நடிகை வனிதா விஜயகுமார்

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் விஜகுமாரின் மூத்த மகள் தான் இந்த வனிதா விஜயகுமார். சர்ச்சைகளுக்கு பெயர் போன வனிதா ஒரு நடிகை. ‘சந்திரலேகா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார் வனிதா. தொடர்ந்து சில மலையாளம், தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார் வனிதா.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவருக்கு மூன்று முறை திருமணம் ஆகி விவாகரத்தும் ஆகிவிட்டது. வனிதாவின் வாழ்க்கையை வைத்து பல கேலி, கிண்டல்கள் சமூகவலைதளங்களில் அவ்வப்போது பரவி வருகிறது. வனிதா பேசும் ஒவ்வொரு விஷயங்களும், செய்யும் ஒவ்வொரு காரியங்களும் பிரச்சனைக்குள்ளாகும். ஒரு சர்ச்சை உருவாகி அது மறையும் முன்னமே எதாவது சர்ச்சைக்கான பேச்சுக்களை பேசி விடுவார் வனிதா.

கழுத்துல உள்ள கருமை மாயமாக மறைய வேண்டுமா?? அருமையான டிப்ஸ் இதோ!!

இப்படி இருக்கும் வனிதாவை கண்டுகொண்ட விஜய் டிவி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வனிதாவை இறக்கி விட்டு டிஆர்பியை ஏத்திக்கொண்டது. தொடர்ந்து வனிதாவை கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் நடுவராகவும் அமர்த்தியது விஜய் டிவி. முன்னதாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ சமையல் நிகழ்ச்சியின் சீசன் 1ல் கலந்து கொண்ட வனிதா அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றார்.

தற்போது திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் வனிதா இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளார். நடிகர் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் வரும் ‘அந்த கண்ண பாத்தாக்கா’ என்ற பாடலுக்கு கலர் கலராக உடையணிந்து ரீல்ஸ் செய்துள்ளார் வனிதா. இந்த ரீல்ஸ் வீடியோவும் நெட்டிசன்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. அந்த வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here