இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோஹித் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக விளையாடவில்லை. இதன் எதிரொலியாக அவர் தற்போது ஐசிசி தரவரிசையில் இறக்கம் கண்டுள்ளார்.
ஐசிசி
ஐசிசி அனைத்து தரப்பு போட்டிகளையும் கவனித்து அதில் வீரர்களின் செயல்பாடை குறித்து புள்ளிகளை வழங்கி அதனை பட்டியலிட்டு வரும். அந்த வகையில் தற்போது ஐசிசி ஒருநாள் மற்றும் டி 20 தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தங்களது ஒரு நாள் தொடரை விளையாடி வருகின்றனர். இதில் நேற்றைய போட்டியில் துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பினார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆனால் அதற்கு மாற்றாக தவான், கோஹ்லி, ராகுல், க்ருனால் உள்ளிட்டோரால் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் பறந்தது. தற்போது இதன் எதிரொலியாக ஐசிசி தரவரிசை பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி விராட் கோஹ்லி ஒரு நாள் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்திலும், டி 20 போட்டிக்கான தரவரிசையில் 4 வது இடத்திலும் உள்ளார். மேலும் ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை – தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரம்!!
அதேபோல் ராகுலும் டி 20 தரவரிசையில் 5 வது இடத்திற்கு தள்ளப்பட்டார். மேலும் ஒருநாள் போட்டிக்கான பௌலிங் தரவரிசையில் பும்ராஹ் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார். டி 20 பௌலிங் தரவரிசையில் முதல் 10 இடங்களில் இந்திய அணியினர் எவரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.