ஒரு காவலர் மட்டுமே ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் குற்றவாளி – குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ!!

0

நாட்டையே உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தற்போது சிபிஐ ஒரு குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்துள்ளனர். இந்த குற்றப்பத்திரிகையில் ஒரே ஒரு காவலர் மட்டுமே குற்றவாளி என்று அவர்கள் குறிப்பிட்டிருப்பது அனைவரையும் கொந்தளிக்க வைத்துள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிசூடு

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டர்லைட் ஆலையின் மூட வேண்டும் என்று பொது மக்கள் போராட்டம் நடத்தினர். காரணம், இந்த ஆலையின் மூலமாக அந்த பகுதியினை சேர்ந்த மக்கள் அதிகமாக பாதிப்பு அடைந்ததால் மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் தொடர்ச்சியாக 99 நாட்கள் நடைபெற்றது.

இந்த வயசுல இந்த ரீல்ஸ் எல்லாம் தேவையா?? வனிதாவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!!

ஆரம்பத்தில் குறைந்த அளவு மக்களுடன் ஆரம்பித்த இந்த போராட்டம் பெரும் பேரணியாக மாறியது. அதில் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால், இந்த பேரணி சிலரின் சூழ்ச்சியால் மிக பெரிய கலவரமாக வெடித்தது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிசூடு நடத்தினர். இதன் காரணமாக பரிதாபமாக 13 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

குற்றப்பத்திரிகை தாக்கல்

இதனை அடுத்து இது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற கிளையான மதுரை கிளையில் உடனடியாக வழங்கப்பட்டது. தூத்துக்குடியில் மொத்தமாக 10 வெவ்வேறு இடங்களில் துப்பாக்கிசூடு நடைபெற்றுள்ளது. 254 வழக்குகள் இது சம்பந்தமாக பதிவு செய்யப்பட்டது. மதுரை கிளை நீதிமன்ற நீதிபதிகள் அனைத்து வழக்குகளையும் ஒன்றாக தான் விசாரிக்க வேண்டும் என்றும் உடனடியாக இந்த வழக்கு சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து தற்போது இது குறித்து சிபிஐ ஒரு குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்துள்ளனர். அதில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மொத்தமாக 71 நபர்கள் என்றும் அதில் ஒருவர் மட்டுமே காவலர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த குற்ற சம்பவத்திற்கும் ஒரே ஒரு காவலர் பெயர் இடம் பெற்றுள்ளது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here