Friday, May 17, 2024

கன்னியாகுமரியில் 50 அடிக்கு மேல் உள்வாங்கிய கடல் – சுனாமி அச்சத்தில் மீனவர்கள்!!

Must Read

தொடர்ந்து 2 நாட்களாக கன்னியாகுமரி கடல் பல அடி தூரத்திற்கு உள்வாங்கியதால் மீனவர்கள் மற்றும் கடலோரவாசிகள் மிகுந்த பீதி அடைந்துள்ளனர். கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமிக்கு பிறகு இப்படி ஆகி உள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கடல் உள்வாங்குதல்:

கடல் உள்வாங்குதல் என்பது சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களை குறிப்பதாகும். அப்படி தான் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி கடலில் கடந்த 2004 ஆம் ஆண்டு கடல் பல அடிகளுக்கு உள்வாங்கியது. அதே போல் தற்போது 2 நாட்களாக கடல் உள்வாங்கியுள்ளது. இது அங்குள்ள மீனவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கன்னியாகுமரியில் வங்கக்கடல், இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் இவை மூன்றும் சங்கமிக்கின்றன. கடந்த 2 நாட்களாக கடலில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

காலை நன்றாக இருந்த கடல் இரவு 6 மணிக்கு மேல் உள்வாங்க தொடங்கியது. அதுவும் 2 நாட்களாக இந்த மாற்றம் நடைபெற்று வருகின்றது. பகலில் இது போன்ற மாற்றங்கள் இருப்பதில்லை. ஆனால், இரவில் கடல் உள்வாங்குகின்றது. இப்படி உள்வாங்கியதால் கடலில் உள்ள பெரிய பாறைகள், மணல் திட்டுகள் , மணல் பரப்புகள் என்று அனைத்தும் தெரிந்தன. கடல் சுமார் 50 அடிக்கு உள்வாங்கியுள்ளது. இது அங்கிருந்த மீனவர்கள் மற்றும் குடியிருப்புவாசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மக்கள் அச்சம்:

இரவு இப்படி மாறியதால் மக்கள் ஒரு வித அச்சத்துடன் காணப்பட்டனர். இரவு விடிய விடிய தூங்காமல் கண் விழித்துள்ளனர். திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பகுதியில் கடல் போன்று காட்சி அளிக்காமல் ஒரு திடல் போல் காட்சி அளித்துள்ளது. 2004 ஆம் ஆண்டு சுனாமியின் போது கடல் இவ்வாறு காட்சி அளித்துள்ளது, அதனால் அனைவரும் அச்சம் அடைந்துள்ளனர்.

முதன்முதலாக தனது குழந்தையுடன் போட்டோஷூட் செய்த ஆல்யா மனசா – வைரலாகும் புகைப்படம்!!

2 நாட்களாக இதே நிலை தான் நீடிக்கிறது. இது குறித்து அங்குள்ள மீனவர்கள் கூறியதாவது “கடலில் இது போன்று பகலில் தான் இருக்கும். இரவில் நாங்கள் இப்படி பார்ப்பது இதுவே முதல் முறை. தொடர்ந்து இரவு மட்டும் இப்படி இருப்பது எங்களுக்கு வியப்பாகவும், அதே சமயம் பயம் அளிப்பதாகவும் உள்ளது.” என்று கூறினர். அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் இது போன்று நிகழ்வது இயல்பு தான் என்று ஜோதிட நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே., பாமாயில் & துவரம் பருப்பு கிடைப்பதில் சிக்கலா? அரசு வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல் பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் பல்வேறு ரேஷன் கடைகளிலும்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -