கண்ணாடி அணிவதால் ஏற்படும் தழும்பு மறைய வேண்டுமா?? சூப்பர் டிப்ஸ் இதோ!!

0
கண்ணாடி அணிவதால் வரும் தழும்பு
கண்ணாடி அணிவதால் வரும் தழும்பு

தற்போது உள்ள தலைமுறையில் பலருக்கும் கண்ணில் குறைபாடுகள் உள்ளதால் கண்ணாடி அணிய வேண்டி உள்ளது. மேலும் கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் உள்ளது. அந்த வகையில் கண்ணாடி அணிவதால் மூக்குகளுக்கிடையே தழும்புகள் ஏற்படுகிறது. கண்ணாடி அணியாதபோது இது முக அழகை முழுவதுமாக கெடுக்கிறது. இப்பொழுது அந்த தழும்புகளை போக்க என்ன செய்வது என பார்க்கலாம்.

தழும்பை குறைக்க??

இப்பொழுது சிறு குழந்தைகளுக்கு கூட கண்ணாடி போடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்து வருவதே இதற்கு காரணம். இந்த தழும்புகள் சிலருக்கு மாறாத காயமாகவே ஆகி விடுகிறது. இதனால் கண்ணாடியை கழட்டினாலும் அது அவர்களுக்கு வித்தியாசமாகவே தெரிகிறது. இந்த தழும்பை போக்க வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

specs mark
specs mark

தினமும் கண்களை குளிர்ந்த நீரால் கழுவி கொண்டே இருக்க வேண்டும். மேலும் ஐஸ் கட்டிகளை தழும்புகள் உள்ள இடத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் இறந்த செல்கள் மறையும். முகத்திற்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.

eye
eye

வெள்ளரிக்காயை தோல் சீவி எடுத்துக் கொள்ளுங்கள். இதனை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும். தக்காளியையும் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும். இந்த இரண்டையும் கலந்து அதில் தேன் மற்றும் கிளிசரின் சேர்த்து கலந்து அதனை இரவில் தூங்கும்போது தழும்பு இருக்கும் இடத்தில் தடவி காலை எழுந்ததும் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் தழும்புகள் கூடிய விரைவில் மறையும்.

ஓட்ஸ் முகத்திற்கு பளபளப்பை தர கூடிய பொருள் ஆகும். இதனை அரைத்து தேன் மற்றும் காய்ச்சாத பாலை சேர்த்து கலந்து அதனை தழும்பு இருக்கும் இடத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு பிறகு கழுவ வேண்டும். இதனால் தழும்புகள் மறையும்.

cucumber
cucumber

உருளைக் கிழங்கை வட்டமாக வெட்டி அதனை தழும்பு இருக்கும் இடத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு 1 நாளைக்கு 3 முறை செய்து வந்தால் தழும்புகள் மறையும். மேலே கூறப்பட்டுள்ள வழிமுறைகளை நாம் தொடர்ந்து பின்பற்றி வந்தால் கட்டாயமாக நல்ல பலனை பெறலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here