‘நான் சென்னை சென்றதும் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்பேன்’ – கமல்ஹாசன் பேட்டி!!

0

தற்போது அரசியலில் இருந்து விலகிய ரஜினிகாந்திடம், சென்னை சென்றதும் அவரை சந்தித்து அவரது ஆதரவை கேட்பேன் என்று மக்கள் நீதி மையத்தின் தலைவர் களமஹாசன் பேட்டியளித்துள்ளார்.

ரஜினிகாந்த்:

சில நாட்களுக்கு முன்பு தனக்கு ஏற்பட்ட ரத்த அழுத்த கோளாறு காரணமாக ஹைதராபாதில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். அங்கு 3 நாள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த அவர் அதன் பின்பு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மேலும் அவர் கண்டிப்பாக நீண்ட ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதில் அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு சென்னையில் உள்ள தனது இல்லத்திற்கு ரஜினிகாந்த் வந்து சேர்ந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் சென்னை வந்த அவர் தான் அரசியலில் இருந்து விலகப்போவதாகவும் அரசியல் கட்சி தொடங்க போவது இல்லை என்றும் கூறியுள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. மேலும் இதனை பற்றி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நேற்று கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது,”ரஜினியின் இந்த முடிவு ஏமாற்றம் அளிக்கிறது, மேலும் எனக்கு அவரது உடல் நலம் தான் முக்கியம் அவரது ரசிகர்கள் போல் நானும் அவர் நீண்ட நாள் நலமுடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறன்”என்று கூறியுள்ளார்.

கண்ணம்மா இருக்கும் இடத்தை கண்டுபிடித்து செல்லும் சௌந்தர்யா – சூடுபிடிக்கும் பாரதி கண்ணம்மா கதைக்களம்!!

மேலும் கமலஹாசன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “நான் சென்னை சென்றவுடன் ரஜினியை சந்திப்பேன் மேலும் தேர்தலில் தனது கட்சிக்கு ஆதரவு கேட்க உள்ளேன் என்றும் கூறியுள்ளார். மேலும் திராவிடம் யாருக்கும் சொந்தமில்லை அது அனைவர்க்கும் பொதுவானது ஆன்மிகத்தை ஏற்குமாறு என்னையும், பகுத்தறிவை ஏற்குமாறு நானும் யாரையும் நிர்பந்த படுத்த முடியாது. அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். மேலும் எனக்கும் ஆன்மிகத்திற்கும் எந்த விரோதமும் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here