வேலுநாச்சியார் படத்தில் நயன்தாராவா?? இணையத்தில் கசிந்த தகவல்!!

0

வீர மங்கை வேலு நாச்சியாரின் வாழக்கை வரலாற்றை படமாக்க உள்ளார் சுசி கணேசன். மேலும் இந்த படத்தில் வேலு நாச்சியாராக நயன்தாரா நடிக்கப்போவதாக ஊடகங்களில் ஓர் தகவல் பரவி வந்தது. தற்போது இதனை பற்றி நயன்தாரா விளக்கம் கொடுத்துள்ளார்.

வேலு நாச்சியார்:

இவர் கடந்த 17ம் நூற்றண்டில் தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கை பகுதியின் இராணியாக திகழ்ந்தவர். மேலும் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடிய விடுதலை போராட்டத்தின் தலைவி. மேலும் இவர் தான் முதல் பெண் விடுதலை போராட்ட வீராங்கனை என்று சிறப்பிக்கப்படுகிறார். தற்போது தமிழ் சினிமாவில் தனது வாழக்கையில் சாதித்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கி வருகிறார்கள். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்தியாவில் படமாக்கப்படும் சில படங்கள் வாழ்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு தான் உருவாகி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது அந்த பட்டியலில் வீர மங்கை வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாறும் இடம்பிடித்துள்ளது. இவரது வாழ்க்கை வரலாற்று படத்தை சுசி கணேசன் இயக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் வேலு நாச்சியாராக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கப்போவதாக தகவல் ஊடகங்கள் மூலம் பரவி வந்தது. தற்போது இதனை பற்றி விளக்கம் தந்துள்ளார் நயன்தாரா.

#IndvsAus 3வது டெஸ்ட்டில் தாகூரை தேர்வு செய்யும் பிசிசிஐ – நடராஜன் நிலை?? குழப்பத்தில் ரசிகர்கள்!!

அவர் கூறியதாவது வேலுநாச்சியார் கதாபாத்திரத்தில் நான் நடிக்கப்போவதாக வந்த தகவல் பொய்யானதே. ஊடகங்கள் அனைவரும் ஆதாரமில்லாமல் பொய்யான தகவலை பரப்பி வராதீர்கள். மேலும் இதனை படக்குழுவினரும் உறுதி படுத்தியுள்ளார்கள். நயன்தாரா அந்த படத்தில் நடிக்கவில்ல, மேலும் வெளியானது தகவல் வெறும் வதந்தி என்று கூறியுள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here