‘மாஸ்டரை சந்தித்த மாணவன்’ – வைரலாகும் விஜய், காளிதாஸ் புகைப்படம்!!

0

தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகரான ஜெயராம் என்பவரின் மகன் தான் காளிதாஸ் ஜெயராம். காளிதாசும் தற்போது தமிழ் சினிமாவில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். தற்போது காளிதாஸ் தளபதி விஜயை சந்தித்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

காளிதாஸ் ஜெயராம்:

தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகரான ஜெயராம் முந்தைய காலங்களில் அனைவராலும் கவரப்பட்ட ஓர் நடிகர். தற்போது இவரது மகன் காளிதாஸையும் சினிமாவில் இறக்கியுள்ளார். காளிதாஸ் ஜெயராம் தமிழில் முதல் முறையாக “மீன் குழம்பும் மண்பானையும்” என்னும் படம் மூலம் அறிமுகமானார். இந்த படம் கடந்த 2016ம் ஆண்டு வெளிவந்தது. அதன் பிறகு இவர் இயக்குனர் சுதா கொங்கராவின் “புத்தம் புது காலை” என்னும் படத்தில் நடித்தார். மீண்டும் சுதா கொங்கரா இயக்கிய தற்போது வெளிவந்த “பாவக்கதைகள்” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவரது நடிப்பு அனைவரையும் பிரமிக்கவைத்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

#INDvsAUS சிட்னி டெஸ்ட்- இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டை இழந்து தவிக்கும் ஆஸ்திரேலியா அணி!!

தளபதியுடன் காளிதாஸ்:

இவர் தளபதி ரசிகர். இதனை அவர் பேட்டி ஒன்றில் கூட குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது மனம் சோர்வடையும் போதெல்லாம் தளபதியின் பேச்சை கேட்டு தான் புத்துணர்ச்சி பெருவரம். மேலும் தளபதியின் குட்டி கதையின் பெரிய ரசிகர் என்றும் தெரிவித்துள்ளார். இவர் தற்போது தளபதியை சந்தித்துள்ளார். மேலும் அப்போது எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அதில் “மாஸ்டரை சந்தித்த மாணவன்: என்றும் “தனக்காக நேரத்தை ஒதுக்கியதற்கு நன்றி” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here