#INDvsAUS சிட்னி டெஸ்ட்- இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டை இழந்து தவிக்கும் ஆஸ்திரேலியா அணி!!

0

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணி தங்களது மூன்றாவது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். இன்று தனது 2 வது இன்னிங்க்ஸை துவக்கிய ஆஸ்திரேலியா அணி மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் தனது 2 விக்கெட்டை இழந்து தவித்து வருகிறது.

இந்தியா vs ஆஸ்திரேலியா:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் தொடர்களை விளையாடி வருகின்றனர். தற்போது இரு அணிகளும் தங்களது 3 வது டெஸ்ட் போட்டியை சிட்னியில் வைத்து விளையாடி வருகின்றனர். டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் நாளில் சிறிது மழை குறுக்கிட்டு ஆட்டத்தை பாதித்தது. அதன் பிறகு போட்டி துவங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடியது. குறிப்பாக ஸ்மித் சதம் அடித்து அசத்தினார். முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலியா அணி 338 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் ஜடேஜா அதிகபட்சமாக 4 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்பிறகு இந்தியா அணி தனது முதல் இன்னிங்ஸை துவக்கியது. ரோஹித் மற்றும் கில் சிறப்பான துவக்கம் கொடுத்தனர். ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சை இந்தியா அணி பேட்மேகள் எதிர்கொள்ள திணறி வந்தனர். முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 244 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்தியா அணி சார்பில் கில் மற்றும் புஜாரா அரை சதம் அடித்துள்ளனர். இந்த போட்டியில் இந்தியா அணி வீரர்கள் ரன் அவுடில் அதிக விக்கெட்களை இழந்துள்ளனர். ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

தொடக்கத்திலையே 2 விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா:

முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்தியா அணி 94 ரன்கள் பின்தங்கி உள்ளனர். அதன்பிறகு தனது இரண்டாவது இன்னிங்க்ஸை ஆஸ்திரேலியா அணி தற்போது துவக்கியுள்ளது. முதல் இன்னிங்க்ஸை போலவே இதிலும் துவக்க ஆட்டக்காரர் வார்னர் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அனைவரையும் ஏமாற்றினார்.

விக்ரமின் ‘கோப்ரா’ படத்தின் டீஸர் வெளியீடு – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

மற்றொரு துவக்க ஆட்டக்காரர் புகோவ்ஸ்கின் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி தனது முக்கியமான 2 விக்கெட்களை இழந்து திணறி வருகின்றது. தற்போது களத்தில் லாபுசாக்னே மற்றும் ஸ்மித் விளையாடி வருகின்றனர். இந்தியா தரப்பில் அஸ்வின் மற்றும் சிராஜ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தியள்ளனர்.

லைவ் ஸ்கோர்:

ஆஸ்திரேலிய 2 வது இன்னிங்ஸ் – 103\2

லாபுசாக்னே – 47*
ஸ்மித் – 29*

ஆஸ்திரேலியா முன்னிலை – 197 ரன்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here