#INDvsAUS சிட்னி டெஸ்ட்-ரிஷாப் பாண்டுக்கு காயம்!! பேட்டிங் வரிசையில் ஏற்படும் குழப்பம்!!

0

தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் போட்டியை விளையாடி வருகிறது. போட்டியில் பேட்டிங் செய்த போது ரிஷாப் பாண்ட் கையில் காயம் ஏற்பட்டது. தற்போது அவருக்கு பதில் சஹா விக்கெட் கீப்பராக செயல்படுகிறார்.

இந்தியா vs ஆஸ்திரேலியா:

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அணி தற்போது டெஸ்ட் தொடர்களை விளையாடி வருகிறது. ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி 20 தொடர்கள் முடிந்த நிலையில் இரு அணிகளும் தலா 1 முறை தொடரை வென்றுள்ளனர். 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் 2 போட்டிகள் முடிவடைந்து விட்டது. இதில் இரு அணிகளும் தலா 1 முறை தங்களது வெற்றியை பதிவு செய்துள்ளது. தற்போது இரு அணிகளுக்குமான 3 வது டெஸ்ட் போட்டி சிட்னியில் வைத்து நடைபெற்று வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ரிஷாப் பாண்ட் காயம்:

முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து கொண்டிருந்த இந்தியா அணியின் விக்கெட் கீப்பர் ரிஷாப் பாண்டுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் 36 ரன்கள் எடுத்த நிலையில் தனது ஆட்டத்தை இழந்தார். தற்போது இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கியுள்ளது. இதில் பாண்டுக்கு பதில் சஹா விக்கெட் கீப்பராக செயல்படுகிறார். தற்போது இந்தியா அணியின் பேட்டிங் வரிசையில் ஓர் குழப்பம் ஏற்பட்டுள்ளது. விளையாட்டின் போது ஓர் வீரருக்கு தலையில் அடிபட்டால் மட்டுமே அவருக்கு பதில் களமிறங்கும் மாற்று வீரரால் பேட்டிங் மற்றும் பௌலிங் செய்யமுடியும்.

மூன்றாவது நாளாக குறைந்த தங்கத்தின் விலை – மகிழ்ச்சி வெள்ளத்தில் நகைப்பிரியர்கள்!!

ஆனால் காயத்தினால் வெளியேறிய விக்கெட் கீப்பருக்கு பதில் மாற்று வீரரால் கீப்பிங் மட்டுமே செய்யமுடியும். எனவே 2 வது இன்னிங்சில் ரிஷாப் பாண்ட் பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். தொடக்கத்தில் விக்கெட் கீப்பருக்கு காயம் ஏற்பட்டால் அவருக்கு மாற்று வீரராக வருபவர்கள் கீப்பிங் செய்ய முடியாது. கடந்த 3 ஆண்டுக்கு முன்பாக தான் இந்த விதிமுறை மாற்றியமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here