மூன்றாவது நாளாக குறைந்த தங்கத்தின் விலை – மகிழ்ச்சி வெள்ளத்தில் நகைப்பிரியர்கள்!!

0

இந்த புத்தாண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை அதிகரித்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. தற்போது இன்றும் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் நகை வாங்கும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம்:

கடந்த கொரோனா காலங்களில் இருந்தே தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டது. இதனால் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்காக மக்கள் நகை வாங்குவதற்கு தயக்கம் காட்டி வந்தனர். இந்த புத்தாண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து வருகிறது. தற்போது இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது. இதுவே சுபநிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் தங்கம் வாங்குவதற்கு சரியான காலமாக அமையும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அமெரிக்க அதிபர் டிரம்ப் வன்முறை தூண்டும் கருத்துக்கள் பதிவு – ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்!!

தங்கத்தின் இன்றைய நிலவரம்:

சென்னையில் இன்றைய நிலவரப்படி 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.432 குறைந்துள்ளது. 1 சவரன் ஆபரணத்தங்கம் தற்போது ரூ.37,600க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 22 கேரட் ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.54 குறைந்துள்ளது. 1 கிராம் ஆபரணத்தங்கம் தற்போது ரூ.4,700க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் போலவே வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. 1 கிராம் வெள்ளி ரூ.4.10 குறைந்துள்ளது. தற்போது 1 கிராம் வெள்ளி ரூ.69க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 1 கிலோ கட்டி வெள்ளி ரூ.69,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here