தென் மாவட்டங்களில் ‘கிராம விழிப்பு காவலர் திட்டம்’ – இன்று அறிமுகம்!!

0
viggilant police scheme

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் முதல் முறையாக நான்கு கிராமத்திற்கு ஒரு காவலர் என நியமித்து கிராம மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதத்தில் ‘கிராம விழிப்பு காவலர் திட்டம்’ இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கிராம விழிப்பு காவலர் திட்டம்:

தென் மாவட்டங்களில் கிராம விழிப்பு காவலர் திட்டத்தை அறிவித்து முதன் முறையாக மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தொடங்கிவைத்தார் தென் மண்டல ஐ.ஜி முருகன். கிராம விழிப்பு காவலர் திட்டத்தின் நோக்கம் என்னவென்றால், ஒரு கிராமத்தில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் அந்த கிராம மக்கள் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளிக்க தேவையில்லை. மாறாக அவர்கள் கிராம விழிப்பு காவலர்களிடம் சென்று புகார் அளிக்கலாம். அந்த கிராம விழிப்பு காவலர்கள் உயர் அதிகாரிகளிடம் அந்த பிரச்சனையை எடுத்து சென்று அப்பிரச்னைக்கு எளிதாக தீர்வு காணலாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

விக்ரமின் ‘கோப்ரா’ படத்தின் டீஸர் வெளியீடு – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

இந்த திட்டத்திற்கான அறிமுகம் இன்று மதுரை வாடிப்பட்டி அருகேயுள்ள செமினிபட்டியில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கிராம மக்கள், காவல் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது. தென்மண்டல ஐ.ஜி முருகன், டி.ஐ.ஜி ராஜேந்திரன், மதுரை மாவட்ட எஸ்.பி சுஜித்குமார் ஆகியோர் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தனர். அதை தொடர்ந்து பேசிய ஐ.ஜி முருகன் கிராமப்புற மக்கள் எந்த பிரச்னை ஏற்பட்டாலும் இத்திட்டத்தின் மூலம் எளிய முறையில் காவல் நிலையத்தை அணுகி தீர்வுகாணவும், சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்தி கிராம மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும் இந்த விழிப்பு காவலர் திட்டத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here