விக்ரமின் ‘கோப்ரா’ படத்தின் டீஸர் வெளியீடு – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் நடிகை ஸ்ரீநிதி நடிப்பில் உருவான கோப்ரா படத்தின் டீசர் இணையத்தளத்தில் வெளியாகியிருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பின் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகியிருக்கும் கோப்ரா படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

டீசர் வெளியீடு

இமைக்கா நொடிகள் மற்றும் டிமாண்ட்டி காலனி ஆகிய வெற்றி படங்களின் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கோப்ரா. ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல் கடந்த ஜூன் அன்று வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து இப்படத்தின் டீசர் இன்று வெளியாகும் என இயக்குனர் அஜய் ஞானமுத்து நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கும் இப்படத்தின் டீசர் மிகவும் மிரட்டலாக உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வாட்ஸ் ஆப் புதிய 6 விதிமுறைகள் – அனுமதித்தால் மட்டுமே செயலியை பயன்படுத்த முடியும்!!

ரஹ்மானின் பாணியில் அதற்கேற்ப படத்தின் பின்னணி இசையும் ஹை ஸ்கோர் என்று சொல்லலாம். இயக்குனர் சங்கரின் ஐ படத்தில் பல்வேறு வேடங்களில் நடித்திருந்த விக்ரம், தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த படத்தில் 7 வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படம் பெரிய வெற்றியை பெற்று தரும் என்றும் படக்குழுவினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here