வாட்ஸ் ஆப் புதிய 6 விதிமுறைகள் – அனுமதித்தால் மட்டுமே செயலியை பயன்படுத்த முடியும்!!

0

தற்போது அடுத்த மாதம் 8ம் தேதி முதல் வாட்ஸ் ஆப் செயலியை அப்டேட் செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த அப்டேடில் புதிய விதிமுறைகளுக்கு நாம் அனுமதி அளித்தால் மட்டுமே நம்மால் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் ஆப்:

முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களை வைத்திருக்கும் நிறுவனம் தான் வாட்ஸ் ஆப் செயலியையும் வைத்துள்ளது. தற்போது வரும் பிப்ரவரி மாதம் 8ம் தேதி முதல் புது அப்டேட் வெளியாகும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த அப்டேடில் வரும் புதிய விதிமுறைகளை அனுமதி செய்தால் மட்டுமே வாட்ஸ் ஆப் செயலியை பயனாளர்கள் பயன்படுத்த இயலும் இல்லையெனில் அவர்களது அக்கௌன்ட் அழிந்து விடும் என்று தெரிவித்துள்ளனர். தற்போது அதில் கூறிய விதிமுறைகள் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வாட்ஸ் ஆப் புதிய விதிமுறைகள்:

  • நாம் நண்பர்களுடன் செய்யும் செய்தியை அவர்கள் சேகரித்துக்கொள்வார்கள். மேலும் அதனை அவர்களின் மற்றொரு நிறுவனமான முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற வலைத்தளங்களில் வணிக முறையில் பயன்படுத்துவார்கள். நம் பேசியத்திற்கு ஏற்ப அதில் விளம்பரம் வரும்.
  • இதுவரை நாம் அனுப்பும் forward மெசேஜை வாட்ஸ் ஆப் நிறுவனம் சேகரிக்கவில்லை. ஆனால் புதிய விதி முறை படி forward மெசஜையும் சேகரித்துக்கொள்ளும்.
  • புதிய அம்சங்களை பயன்படுத்த வேண்டும் என்றால் privacy policy க்கு அனுமதி அளிக்கவேண்டும். அதனை நீங்கள் செய்தால் நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு அனுப்பும் location மற்றும் அதை பற்றிய தகவல் மற்றும் ஆடியோ மெசேஜை வாட்ஸ் ஆப் நிறுவனம் சேகரித்துக்கொள்ளும்.
  • மேலும் நாம் என்ன மொபைல் பயன்படுத்துறோம், அதில் இருக்கும் சிம், அதனுடைய நம்பர், நம் மொபைலின் os , பேட்டரி அளவு, சிக்னல், time zone , ip address, மொழிகள் போன்ற அனைத்து தகவலையும் சேகரிக்க உள்ளது.
  • மேலும் நாம் ஒரு செய்தியை அனுப்பிவிட்டு அது செல்லவில்லை என்றால் அதை நாம் நீக்கிவிடுவோம். இனி அந்த செய்தி நீக்கப்படாது அந்த செய்தி வாட்ஸ் ஆப் சர்வரில் அடுத்த 30 நாட்களுக்கு இருக்கும் அதன் பிறகே நீக்கப்படும்.
  • தற்போது புதிதாக வந்திருக்கும் WHATSAPP PAYMENT யை பயன்படுத்தினால் யாருக்கு நீங்கள் பணம் அனுப்புகிறீர்கள் என்ற தகவல்களையும் சேகரிக்க உள்ளனர். மேலும் Privacy Policy மற்றும் Terms Of Service ஒப்புதல் (agree) கொடுத்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அர்த்தம்.

பறவை காய்ச்சல் எதிரொலி – முட்டை மற்றும் கோழியின் விலை சரிவு!!

தற்போது இந்த விதிமுறைகளால் பயனாளர்கள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த விதிமுறைகள் அனைத்தும் வாட்ஸ் ஆப்பில் நாம் நம்பரை பதிவு செய்திருந்தால் மட்டுமே பொருந்தும். வரும் 8ம் தேதி வரை கால அவகாசம் இருப்பதால் மக்கள் சற்று சிந்தித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here