அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தொடக்கம் – 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!!

0
admk general meeting

சென்னையில் இன்று அதிமுக சார்பில் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் தொடங்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் 16 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிமுக பொதுக்குழு கூட்டம்

வரும் தேர்தலை ஒட்டி ஏற்கனவே திட்டமிட்டபடி அதிமுக கட்சியின் சார்பில் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. பொதுக்குழுவில் அதிமுக தலைவரும் ஒருங்கிணைப்பாளருமான முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டனர். கூட்டத்தின் தொடக்கமாக முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதையை செலுத்தினர். பின்னர் ஜெயலலிதா மறைவிற்கு 1 நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த பொதுக்குழு கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக பழனிச்சாமியை ஆதரிப்பவர்களுடன் மட்டுமே கூட்டணி வைத்து கொள்ள வேண்டும் எனவும், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவிற்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் போன்ற 16 தீர்மானகள் நிறைவேற்றபட்டன.

பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, ‘எடப்பாடியை மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துவருகிறார். அவரை பற்றி அவதூறாக பேசினால் அவர்கள் நாக்கு அழுகிப்போகும். அண்ணன் எடப்பாடி தீரன் சின்னமலை போன்றும் ஓபிஎஸ் புலித்தேவன் போன்றவர்கள். இவர்கள் இருவரும் ராமன்-லட்சுமணன் போன்றும் மருது சகோதரர்கள் போலவும் இருக்கின்றனர்’ என்று குறிப்பிட்டார்.

மூன்றாவது நாளாக குறைந்த தங்கத்தின் விலை – மகிழ்ச்சி வெள்ளத்தில் நகைப்பிரியர்கள்!!

பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக முதல்வர் வேட்பாளராக பழனிச்சாமியை ஒருமனதாக ஏற்றுகொண்டனர் குழுவினர். மேலும் அதிமுக உடனான கூட்டணி கட்சிகளுக்கு எந்த தொகுதிகளை கொடுக்கவேண்டும் என பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வத்திற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. கொரோனா இலவச தடுப்பூசிக்காக மத்திய அரசிற்கும், ஜெயலலிதா நினைவிடத்தை உலக புகழ் பெற்றதாக மாற்றும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தது.

மேலும் 20% அரசுப்பணியில் தமிழ் வழியில் கற்கும் மாணவர்களுக்கு ஒதுக்கியதற்காக நன்றி தெரிவிக்கப்பட்டது. புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 600 கோடி கொடுத்ததற்கும், மாநிலம் முழுவதும் 2000 மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டதற்கும், பொங்கல் பரிசுடன் ரூ 2500 வழங்கப்பட்டதற்கும், மேலும் டிஜிட்டல் இந்தியா விருது பெற்றதற்கும் தமிழக அரசிற்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here