பாரதியிடம் கண்ணம்மாவை அழைத்து வர கெஞ்சும் வேணு – ஒத்துக்கொள்வாரா பாரதி??

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது விறுவிறுப்பான சம்பவங்கள் ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. இத்தனை வருடங்கள் பாரதியும் கண்ணம்மாவும் பார்த்துக்கொள்ளாமல் இருந்தனர். தற்போது இன்றைய எபிசோடில் வேணுவிற்கு விபத்து ஏற்பட்டுள்ளதால் அவரை பார்க்க வரும் பாரதி கண்ணம்மாவை சந்திக்கிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர்ந்து பல எதிர்பாராத சம்பவங்கள் நடந்துகொண்டுள்ளது. லட்சிமியை முதன்முதலில் ஸ்கூலுக்கு அனுப்பும் கண்ணம்மா திரும்பி வரும் வேளையில் வேணுவை பார்க்க அவருக்கு எதிர்பாராத விபத்து ஏற்படுகிறது. மேலும் அவரை ஹாஸ்பிடலில் சேர்க்க மிகவும் பதட்டத்தில் இருக்கிறார் கண்ணம்மா.

பாரதியிடம் கால் செய்து சொல்ல பாரதியும் ஹாஸ்பிடலுக்கு கிளம்பி வருகிறார். மேலும் கண்ணம்மா மாமாவை பார்த்து விட்டு செல்லலாம் என்று உள்ளே சென்று வேணுவிடம் கண்ணீருடன் பேசிவிட்டு செல்ல வேணுவிற்கு திடீரென முழிப்பு வருகிறது. கண்ணம்மாவை பார்த்து அதிர்ச்சியடைகிறார்.

அவரை நிற்க சொல்லி கெஞ்ச கண்ணம்மாவும் வருகிறார். வேணு கண்ணம்மாவை வீட்டிற்கு வரும் படி கண்ணம்மாவிடம் கெஞ்சுகிறார். ஆனால் கண்ணம்மா கேட்பதாக இல்லை. மேலும் அங்கிருந்து கிளம்பி செல்ல அப்பொழுது பாரதியும் உள்ளே வருகிறார்.

அப்பொழுது பார்த்து பாரதி உள்ளே கண்ணம்மாவை பார்த்து அதிர்ச்சியடைகிறார். வேணுவும் வீட்டிற்கு வர சொல்லி கெஞ்ச கண்ணம்மா எதுவும் பேசாமல் இருக்கிறார். அடுத்து பாரதி இவ எதுக்கு வீட்டுக்கு வரணும் என்று எடுத்தெறிந்து பேசுகிறார். இதனால் கண்ணம்மாவும் அங்கிருந்து சென்று விடுகிறார்.

காரில் வரும் வேணு பாரதியிடம் கடுமையாக பேசுகிறார். பாரதி விடா பிடியாக கண்ணம்மாவை அழைத்து வர மறுக்கிறார். இதனால் வேணு கடுப்பாகி பாரதியை கண்டபடி பேசுகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here