திருமணத்திற்கு பிறகு கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட காஜல் – குவியும் வாழ்த்துக்கள்!!

0
kajal agarwal

தமிழ், தெலுங்கு என பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். சில வருடங்களாக மார்க்கெட் குறைந்த காஜல் அகர்வாலுக்கு எப்பொழுது திருமணம் என்று பலரும் கேட்டு வந்தனர். ரசிகர்களின் ஆசைக்கு இணங்க தற்போது அவருக்கு கோலாகலமாக திருமணமும் நடந்தேறியது. இந்நிலையில் தற்போது அவர் கணவரிடம் எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

காஜல் அகர்வால்

மாடலிங் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். இவரின் முதல் படமே ஹிந்தி தான். ஆனால் அவருக்கு அங்கு வரவேற்ப்பு கிடைக்கவில்லை. தமிழில் நடித்ததன் மூலமே அவருக்கு தெலுங்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. மகதீரா அவருக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு என்றே சொல்லலாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

kajal agarwal

தொடர்ந்து பல ஹிட் படங்களையும் கொடுத்து வந்தார். மேலும் தமிழும் சரி தெலுங்கிலும் சரி பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். ரசிகர்களில் கனவு கன்னியாகவே திகழ்ந்தார் காஜல். ஆனால் எந்த ஹீரோயினாக இருந்தாலும் மார்க்கெட் இருக்கும் வரை தானே.

அதே கதை தான் காஜலுக்கு. வயதான ஹீரோயின்களுடன் நடிக்கும் நிலை ஏற்பட்டதால் அடுத்து அவருக்கு எப்பொழுது கல்யாணம் என்று கேள்வி எழுப்பி வந்தனர். தன் திருமணத்தை பற்றி வாய் திறக்காமல் இருந்த காஜல் பல வருடங்களாக தொழிலதிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

ஆனால் அதை பற்றி இதுவரை சொல்லியது கிடையாது. இவரின் தங்கைக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் உள்ளது. அதனாலேயே பலரும் இவருக்கு திருமணம் எப்பொழுது என்று நச்சரித்து வந்தனர். மேலும் லாக்டவுன் சமயத்திலேயே காஜலுக்கு ரகசியமாக நிச்சயம் முடிந்துள்ளது.

kajal agarwal

மேலும் பல நாட்களுக்கு பிறகே திருமண தேதியை அறிவித்தார். அக்டோபர் 30 இல் இவர்களுக்கு திருமணம் முடிந்தது. கொரோனா காலம் என்பதால் மும்பையில் உள்ள தனது வீட்டிலேயே திருமணத்தை நடத்தியுள்ளார்.

kajal marriage

மேலும் அனைவரையும் அழைக்காமல் நெருங்கிய சொந்தங்களை மட்டுமே வைத்து திருமணத்தை முடித்துள்ளனர். தற்போது தன் கணவருடன் எடுத்த திருமண புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here