‘எனக்கு பிடித்த நடிகர் எப்போவுமே விஜய் தான்’ – நடிகை காஜல் அகர்வால் பளிச் பேட்டி!!

0

காஜல் அகர்வால் தற்போது கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் தமிழ் திரையுலகில் உங்களுக்கு பிடித்த நடிகர் பெயர் என்ன? என்று அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகர் விஜய் என யோசிக்காமல் பதிலளித்துள்ளார்.

நடிகை காஜல் அகர்வால்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் காஜல் அகர்வால். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை காஜல் அகர்வால். ஹிந்தி திரைப்படத்தின் மூலம் கடந்த 2004ம் ஆண்டு சினிமாத்துறைக்குள் நுழைந்த நடிகை காஜல் அகர்வால், நடிகர் பரத்துடன் ‘பழனி’ என்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தொடர்ந்து கார்த்தியுடன் ‘நான் மகான் அல்ல’, விஜய்யுடன் ‘மெர்சல்’, சூர்யாவுடன் ‘மாற்றான்’, ‘துப்பாக்கி’, அஜீத்துடன் ‘விவேகம்’ உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் தமிழ்த்திரையுலகில் முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட்டுள்ளார் நடிகை காஜல் அகர்வால். நடிகர் விஜய்யுடன் இவர் நடித்த திரைப்படங்கள் எல்லாம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

நாளை ஐபிஎல் மினி ஏலம் – அணிகள் வைத்திருக்கும் தொகை எவ்வளவு தெரியுமா??

கொரோனா ஊரடங்கில் நடிகை காஜல் அகர்வாலுக்கு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபருடன் திருமணம் முடிந்துள்ளது. திருமணத்திற்கு பிறகும் முன்பைப்போல திரைப்படங்களில் நடித்து வருகிறார் இவர். தற்போது ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார் காஜல் அகர்வால். இந்த வெப் தொடர் விஜய் டிவியின் இணையதளமான ஹாட்ஸ்டாரில் தற்போது ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட காஜல் அகர்வாலிடம் அவருக்கு பிடித்த தமிழ் நடிகர் யார் என கேள்வி கேட்கப்பட்டது. உடனே எந்த தயக்கமும் இன்றி நடிகர் விஜய் என கூறியுள்ளார் காஜல் அகர்வால். இந்த தகவல் காஜல் அகர்வால் ரசிகர்களுக்கு மட்டுமல்ல நடிகர் விஜய்யின் ரசிகர்களுக்கும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here